பிப்.23.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 10ஆண்டு ஆட்சியில் இருந்த அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது. திருச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சரின் துணைவி, முன்னாள் துணை மேயர், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மகன், ஆகியோர் தோல்வி அடைந்துள்ளனர். தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையும் என தெரிந்துகொண்டு கரூர் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆளுங்கட்சி பொறுப்பிலிருந்த தலைகள் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி விட்டனர். கூட்டுறவு பதவி, கட்சி பதவி என பல்வேறு பொறுப்புகளை அனுபவித்தவர்கள் தேர்தலில் நிற்காமல்போய்விட்டனர்.
இதேபோல் 7 ஆண்டுகளாக மத்திய பாஜக ஆட்சியில் பல்வேறு சலுகைகளை அனுபவித்த பாஜக நிர்வாகிகளும் தேர்தலில் நிற்கவில்லை. பாஜக வேட்பாளர்களுக்கு உதவியும் செய்யவில்லை. பிரச்சாரமும் செய்யவில்லை. வெளியில் வராமல் வாட்ஸ்அப்பிலும், பேஸ்புக்கிலும் அரசியல் செய்கின்றனர். இதுகுறித்து மாநிலபாஜக தலைவர் அண்ணாமலையிடம் புகார் செய்ய இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அதிமுக சார்பில் 11 வது வார்டில் தினேஷ்குமார், 14வது வார்டில் சுரேஷ் வெற்றி பெற்றனர்.
மாநகராட்சி தேர்தலில்4வது வார்டில் பாஜக வேட்பாளர் உஷா 954 வாக்குகளும், இருபத்தி ஆறாவது வார்டில் பாஜக வேட்பாளர் செல்வன் 427 வாக்குகளையும் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தனர்.