மார்ச்.31.
கரூர் மாநகராட்சி நிதிநிலை அறிக்கையை இன்று மேயர் கவிதா கணேசன் மாமன்றத்தில் தாக்கல் செய்தார் – .
கரூர் மாநகராட்சி சாதாரண கூட்டம் மற்றும் அவசரக் கூட்டம் நடைபெற்றது. 2023 -24 ஆம் ஆண்டுக்கான கரூர் மாநகராட்சி நிதிநிலை அறிக்கையை மேயர் கவிதா கணேசன் தாக்கல் செய்தார். துணை மேயர் தாரணி சரவணன், ஆணையர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.
2023 – 24 ஆம் ஆண்டுக்கான பொது நிதியாக 173.36 கோடியும், குடிநீர் வடிகால் நிதியாக 132.50 கோடியும், ஆரம்பக் கல்வி நிதியாக 7.12 கோடியும் செலவினங்களாக தாக்கல் செய்யப்பட்டது. மொத்த வரவு 311.46 கோடி. மொத்த செலவினங்கள் 313.98 கோடி. . இதன் அடிப்படையில் சுமார் ரூ. 2 கோடி அளவில் பற்றாக்குறை.
நடப்பு ஆண்டில் நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகள் –
அம்ருத் 2.0 திட்டத்தில் கரூர் மற்றும் இனாம் கரூர் பகுதியில் குடிநீர் அபிவிருத்தி பணிகள், மண் சாலைகளை தார் சாலையாக மாற்றியமைக்கும் பணிகள், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் திருவள்ளுவர் மைதானத்தில் மேற்கு பகுதியில் புதிய மாவட்ட நூலகம் கட்டுதல், தாந்தோணி பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இருந்த இடத்தில் பணிபுரியும் பெண்களுக்கு விடுதி கட்டுதல், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஆட்சியர் வளாகத்தில் அறிவியல் பூங்கா அமைப்பது, பொது நிதி பூங்காக்கள் மேம்பாட்டு பணிகள், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பொதுக் கழிப்பிடம் மற்றும் சமுதாய கழிப்பிடம் கட்டுதல், தாந்தோணி மலை பகுதியில் மின் மயானம் கட்டுவது, எம்பி தொகுதி மேம்பாட்டு திட்டம் எம் எல் ஏ தொகுதி மேம்பாட்டு திட்டம், உட்கட்டமைப்பு அடிப்படை வசதிகள் மேற்கொள்வது,
மாநகராட்சி பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பது, மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்குவது, ஆகிய திட்டங்கள் ரூ 216. 3 6 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்வது.
தற்போது நடைபெற்று வரும் பணிகள்- கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம், மண் சாலைகளை தார் சாலையாக மாற்றும் திட்டம், காமராஜர் தினசரி மார்க்கெட், மேம்பாட்டு திட்டம், பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூலகம் மற்றும் அறிவு சார்மையம், தாந்தோணி சுங்ககேட்பகுதியில் நவீன மீன் மார்க்கெட், புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி, வெங்கமேடு மேம்பாலம் முதல் சின்ன குளத்து பாளையம் வரை இணைப்புச் சாலை அமைப்பது, மோகனூர் வாங்கல் சாலை வழியாக இணைப்பு சாலை அமைப்பது, மழைநீர் வடிகால் சாலை பணிகள், எல்என்எஸ். கிராமம் பகுதியில் புதிய மண்டல அலுவலகம், பசுபதிபுரம் தெற்கு, மேல்நிலைத் தொட்டி வளாகம், சனப்பிரட்டி பகுதிகளில் மண்டல அலுவலகம் கட்டும் பணி,
தேசிய சுகாதார இயக்கம், என்எஸ்கே நகர், பசுபதிபாளையம், தோரணகல்பட்டி பகுதியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் , தேசிய சுகாதார இயக்கம் மையங்கள் 4இடங்களில் அமைப்பது, நகர்ப்புற புது சுகாதார ஆய்வகம் கட்டுவது, புதிய எல்இடி தெரு மின்விளக்கு வசதி ஏற்படுத்துவது ஆகிய பணிகளை விரைந்து முடிப்பது என்ன கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.