மே.9.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுபணித்துறை (கட்டடங்கள்) நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் .எ.வ.வேலு, மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் V செந்தில் பாலாஜி ஆகியோர் சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அரசு கூடுதல் தலைமை செயலாளர் (நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை) பிரதீப்யாதவ், தலைமை வகித்தார். கலெக்டர் பிரபு சங்கர், எஸ் பி .சுந்தரவதனம், இயக்குநர் நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம் இயக்குனர்.கோதண்டராமன், முன்னிலை வகித்தனர்.
பின்னர் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறியது-
அமராவதி ஆற்றின் குறுக்கே கோயம்பள்ளி மேலப்பாளையம் இடையே 2012-2013 ல் ரூ.13.70 கோடி ரூபாயில் பாலம் கட்டப்பட்டது. ஆனால் அதற்கு கடந்த ஆட்சியில் அணுகு சாலை அமைக்கவில்லை. ஆறு கிராமங்களுக்கு இணைக்க வேண்டும். 10 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்படும்.
மனோகரா கார்னர் பேருந்து நிலையம் அருகே நகரும் படிக்கட்டு ஏற்படுத்த டிபிஆர் தயாரிப்பு செய்வதற்காக 10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கரூர் சுற்றுசாலை புறவழிச்சாலை வழக்கு இருந்தது. அந்த வழக்கு முடிவு பெற்றதையடுத்து அரசின் சார்பாக திட்டம் மதிப்பீடு பெற்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிலம் எடுப்பு பணிகள் முடிந்ததும் புறவழிச்சாலை அமைக்கப்படும்.
தேசிய நெடுஞ்சாலைகள் பொறுத்தளவில் ஏற்கனவே கரூர் முதல் கோயம்புத்தூர் திட்டம் மதிப்பீடு பெற்று நீங்கள் புறவழிச் சாலைகள் அமைக்கலாம் மதுரை உயர்நீதிமன்றத்திலே ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிலம் எடுப்பு பணிகள் நடைபெறுகிறது. இது முடிந்ததும் சாலை அமைக்கப்படும். இருவழிச் சாலைகளில் 10 ஆண்டுகளுக்கு முன்பே நான்கு வழிச்சாலையாக ஆக்கி இருக்க வேண்டும்.
நெடுஞ்சாலைகள் இருவழிச் சாலையாக இருக்கின்றது போக்குவரத்து எடுத்துக் கொண்டால் அதிகமாக இருக்கின்றது. கடந்த காலங்களில் பத்து வருடங்களுக்கு முன்பு நான்கு வழிச்சாலையாக ஆக்கி இருக்க வேண்டும். முன் பிறந்தவர்கள் செய்யவில்லை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து வலியுறுத்தினார். இப்போது டெண்டர் விடப்பட்டுள்ளது.
இது ஒன்றிய அரசாங்கம் அனுமதி பெற்று நிதியினை பெற்று செய்ய வேண்டிய சாலையாகும். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்காக பலமுறை டெல்லிக்கு சென்று மாண்புமிகு அமைச்சர் நிதின் கட்கரி அவர்களை சந்தித்து அதற்கான நிதிகளை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு ஆண்டுக்குள் பணிகள் முடிவடையும்.
இப்பொழுது நமது கரூர் மாநகராட்சி பகுதியில் ஒரு புதிய பேருந்து நிலையம் கட்டி வருகின்றோம் அங்கிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம் வரை சாலைகளை விரிவு படுத்த வேண்டும் என்று நமது அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தினார். முதலமைச்சரின் பரிந்துரையை பெற்று அமைக்கப்படும்.
கரூர் -கோவை நான்கு வழி சாலைப் பணியினை இரண்டாகப் பிரித்து கரூர் பகுதியில் 26 கிலோ மீட்டர் ரூபாய் 137 கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. மீதமுள்ள மேற்குப் பகுதி திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதிகளில் இரண்டாவது டெண்டர் விடப்பட்டு ஓராண்டுக்குள் சாலை வாகன ஓட்டிகளின் பயன பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பாளையம் சாலையில் அமைச்சர்கள் எ.வ.வேலு, செந்தில் பாலாஜி மரக்கன்றுகளை நடவு செய்தனர். சாலை பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சகோ என்ற கையெட்டினை வெளியிட்டனர். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 10 பயனாளிக்கு தலா ரூ.12,500 மதிப்பிட்டில் திறன்பேசியினை வழங்கினர்.
பின்னர் சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த கையெட்டினை வெளியிட்டார்கள், தொடர்ந்து மாவட்ட அளவில் சாலை பாதுகாப்பு குறித்து நடைபெற்ற ஓவியப்போட்டி, பேச்சப்போட்டி முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு சான்றும். கேடயமும், போக்குவரத்துத் துறையில் 27 வருடம் விபத்து இல்லாமல் பேருந்து ஒட்டிய ஒட்டுநருக்கு பாராட்டு சான்றும், 108 ஆம்புலனஸ் சிறப்பாக பணியாற்றிய ஒட்டுநர் மற்றம் உதவியாளருக்கு பாராட்டு சான்று மற்றும் கேடயம் வழங்கினர்.
எம் எல் ஏக்கள் மாணிக்கம்,(குளித்தலை), இளங்கோ (அரவக்குறிச்சி), சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), மாநகராட்சி மேயர் கவிதா, தலைமை பொறியாளர்கள் சந்திரசேகர், முருகேசன், தனித்துணை ஆட்சியர் சைபுதீன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.