டிச.8.
அண்மையில் சர்வதேச, தேசிய அளவில் சாதனை புரிந்த பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த தமிழக மாணவர்களுக்கு சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி “இளம் சாதனையாளர் விருது” பாராட்டினார்.
கரூர் பரணி வித்யாலயா பள்ளியில் பயிலும், சர்வதேச சாஃப்ட் டென்னிஸ் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற யாழினி ரவீந்திரன், சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நடத்திய கடிதம் எழுதும் போட்டியில் தேசிய, தமிழக அளவில் முதலிடம் பிடித்து உலக போட்டியில் பங்கேற்ற ஆதிரா மணிகண்டன், தேசிய சிபிஎஸ்இ ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தனிகா சதீஸ்குமார், தேசிய சிபிஎஸ்இ ஏரோபிக்ஸ் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற சபரி யஸ்வந்த், “ஹெச்.சி.எல் பன்னாட்டு நிறுவனம் இந்திய அளவில் நடத்திய போட்டியில் “தேசிய அளவில் சிக்கல்களை தீர்க்கும் இளம் வல்லுநர்” பட்டம் வென்ற சருண் ஆதித்யா ஆகியோருக்கு சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி “இளம் சாதனையாளர்” விருது வழங்கி பரிசளித்து பாராட்டினார்.
தமிழக ஆளுநரிடம் சென்னை ராஜ்பவனில் இளம் சாதனையாளர் விருது பெற்று கருரூக்குப் பெருமை சேர்த்த பரணி வித்யாலயா மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு தாளாளர் S..மோகனரங்கன் தலைமை தாங்கினார். செயலர் பத்மாவதி மோகனரங்கன், அறங்காவலர் சுபாஷினி அசோக்சங்கர் முன்னிலை வகித்தனர். சாதனை மாணவர்களையும் சாதனைக்கு உறுதுணையாக இருந்த பரணிக் கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர் C.ராமசுப்ரமணியன், முதல்வர் S.சுதாதேவி, துணை முதல்வர் R.பிரியா, ஆசிரியர்களையும் பரணி பார்க் கல்விக் குழும மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்தினர்.
புகைப்படம்: கரூர் பரணி வித்யாலயா சர்வதேச, தேசிய சாதனை மாணவர்களுக்கு “இளம் சாதனையாளர்” விருது வழங்கி பாராட்டும் மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி. அவர்கள்.