மே.26.
கரூர் மாவட்ட ஓவியர்கள் ஓவிய ஆசிரியர்கள் கூட்டமைப்பு கருவூர் கலை விழாவை கரூர் மாநகராட்சி குமரன் உயர்நிலைப் பள்ளியில் இன்று நடத்தியது ஓவிய கண்காட்சி படத்திறப்பு விழாவுக்கு கரூர் மாவட்ட ஓவிய ஆசிரியர்கள் சங்க தலைவர் ஆதி மோகன், தலைமை வகித்தார். எம் எஸ் டி கலைகள் கைவினைகள் மைய தலைவர் வே ராஜூ, வடிவேல், செழியன், ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர். ரவிக்குமார் வரவேற்று பேசினார். தமிழ்நாடு ஓவியர்கள் சங்க கரூர் மாவட்ட தலைவர்ஜெயசங்கர் அறிக்கை தாக்கல் செய்து கோரிக்கைகள் குறித்து பேசினார்.
கே பி சுந்தராம்பாள், கி.வா.ஜ. ஞானபீட விருதாளர் எழுத்தாளர் அகிலன், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் திரைப்பட நடிகர் டி ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்டோரின் படங்கள் திறந்து வைக்கப்பட்டது. கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கண்காட்சியை பார்வையிட்டு பரிசு வழங்கி பேசினார்முன்னாள் பேராசிரியர் மாணிக்கவாசகம், முனைவர் லோகநாதன், சூர்யா கதிரவன், ஓவியம் ரவிக்குமார் யோகா வையாபுரி பேரின்ப ராஜன் ஜெயக்குமார் நகர் மன்ற உறுப்பினர் பாலா வித்யா அருள் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் சத்தியசீலன் நன்றி உரை கூறினார்.காளிமுத்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் இளம் ஓவியர்களுக்கான பரிசளிப்பு விழா டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஓவிய ஆசிரியருக்கான பாராட்டு விழா குமரன் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவகாமி தலைமையில் நடைபெற்றது ஆதி மோகன் ஜெய்சங்கர் கண்மணி ராஜேஸ்வரி ரவிசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் முன்னாள் பேராசிரியர் மாணிக்கவாசகம் முனைவர் கவிமணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.