அக்.29.
கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி கரூர். கிருஷ்ணராயபுரம் (தனி) மற்றும் குளித்தலை ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளின் 2025-ம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல்களை கரூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான தங்கவேல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.
கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் 1,00.526 ஆண் வாக்காளர்களும், 1,10.440 பெண் வாக்காளர்களும், 4 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,10.970 வாக்காளர்களும் மற்றும் 253 வாக்குச்சாவடி மையங்கள் 160 வாக்குச் சாவடி அமைவிடங்களும் உள்ளன.
கரூர் சட்டமன்றத் தொகுதியில் 1,13.403 ஆண் வாக்காளர்களும். 1.26.728 பெண் வாக்காளர்களும். 39 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,40,170 வாக்காளர்களும் மற்றும் 270 வாக்குச்சாவடி மையங்கள், 98 வாக்குச் சாவடி அமைவிடங்களும் உள்ளன.
கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் 102734 ஆண் வாக்காளர்களும், 1,08.302 பெண் வாக்காளர்களும் 33 இதர வாக்காளர்களும் மொத்தம் 211069 வாக்காளர்களும் மற்றும் 260 வாக்குச்சாவடி மையங்கள். 204 வாக்குச் சாவடி அமைவிடங்களும் உள்ளன.
குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் 1.10.743 ஆண் வாக்காளர்களும், 1,16.317 பெண் வாக்காளர்களும். 4 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,27,064 வாக்காளர்களும் மற்றும் 272 வாக்குச்சாவடி மையங்கள். 167 வாக்குச் சாவடி அமைவிடங்களும் உள்ளன.
மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க/நீக்க/திருத்தம் /இடமாற்றம் மனுக்கள்அளிக்க கால அவகாசம் 29.10.2024 (செவ்வாய்) முதல் 28.11.2024 (வியாழன்) வரையிலும், மனுக்கள் பெற சிறப்பு முகாம் 16.11.2024, 17.11.2024 மற்றும் 23.11.2024, 24.11.2024 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது. வாக்காளர் பதிவு அலுவலரால் மனுக்கள் மீதான நடவடிக்கை முடிவு 24.12.2024 க்குள் செய்யப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் 06.01.2025 அன்று வெளியிடப்படும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் திருத்தம். இடமாற்றம் தொடர்பான கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் தொடர்பாக ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலைமுகவர்களும் ஒரு நாளைக்கு தலா 10 வீதம் அதிகபட்சமாக 30 படிவங்கள் வரை சமர்ப்பிக்கலாம். அனைத்து கோரிக்கைகள் மனுக்களிலும் வாக்காளர் ஆதார் எண்ணை குறிப்பிடவேண்டும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக்கோரும் மனுதாரர் 21 வயதிற்கு மேற்பட்டவராயின். அவர் முன்பு சாதாரணமாக வசித்து வந்த முகவரி கட்டாயம் படிவம்-6 மனுவில் குறிப்பிட வேண்டும். மேலும் ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டு தற்போது முகவரி மாற்றம் கோரும் வாக்காளர்கள் அவர் முன்பு சாதாரணமாக வசித்து வந்த முகவரி / வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண்ணை கட்டாயம் படிவம் 8ல் சமர்ப்பிக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் இடமாற்றம் செய்தல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக வரிசை எண்கள் கொண்டுள்ள புதிய படிவங்களை (படிவம் 6, 6A. 68.7 மற்றும் 8) மட்டுமே பயண்படுத்திட வேண்டும்.
மனுதாரரின் மனுவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள எதுலாக, கோரிக்கை மனுவில் (படிவம் 6, 6A, 6b, 7 மற்றும் 8) மனுதாரரின் கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியினை தவறாது குறிப்பிடவேண்டும்.
29.10.2024 முதல் 28.11.2024 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீக்க, திருத்தம் செய்ய மற்றும் இடமாற்றம் செய்ய அனைத்து வேலை நாட்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அமைவிட அலுவலர் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர் ஆகியோரிடம் மனுக்களை அளிக்கலாம்.
29.10.2024 முதல் 28.11.2024 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 17 வயது முடிவுற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு 18 வயது பூர்த்தியடைந்தவுடன் அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியல் சேர்க்கப்படும்.
சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வாக்குச்சாவடி நியமன அலுவலரிடம் மனுக்களை அளிக்கலாம் மேற்படி முகாமில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக படிவம் 6பி பெற்று தங்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைத்துக்கொள்ளலாம். நாளது தேதிவரை கரூர் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் 84.26% ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://voterportal.eci.gov.in இணையதனங்கள் மற்றும் Voter Hepline என்ற மொபைல் செயலி மூலமாகவும் மனுக்களை அளிக்கலாம் என கலெக்டர் தெரிவித்தார்.
இந்திகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், குளித்தலை சார் ஆட்சியர் ஸ்வாதி, கரூர் வருவாய் கோட்டாட்சியர் முகமது பைசல். மாநகராட்சி ஆணையர் சுதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் யுரேகா, மற்றும் ஆதிகிருஷ்ணன், மாவட்ட தலைவர். பகுஜன் சமாஜ் கட்சி, குமார். மாவட்ட தலைவர் (ஆம் ஆத்மி கட்சி) செல்வகுமார். மாவட்ட துணை அமைப்பாளர். வழக்கறிஞர் அணி (திராவிட முன்னேற்றக் கழகம்). தண்டபாணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மோகன்குமார். மாவட்ட துணை செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பாலகிருஷ்ணன், தாந்தோணி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர், அதிமுக. திணேஷ்குமார். கரூர் மத்திய வடக்கு பகுதி செயலாளர். சுரேஷ், கரூர் கிழக்கு பகுதி செயலாளர், பாலசுப்ரமணி, வழக்கறிஞர். திராவிட முன்னேற்றக் கழகம், எஸ்.சண்முகசுந்தரம், மாவட்ட தலைவர். பாரதிய ஜனதா கட்சி, ஆறுமுகம், மாவட்ட பொது செயலாளர், பாரதிய ஜனதா கட்சி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.