ஏப்.6.
கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி மீண்டும் கரூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் ஜோதிமணி வாக்கு சேகரித்தார் . அவரது சொந்த ஊரான பெரிய திருமங்கலத்தில் அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. எம்எல்ஏ மொஞ்சனூர் இளங்கோவுடன் சென்று வாக்கு சேகரித்த போது மறைந்த தனது தாயாரை நினைத்து கண்ணீர் விட்டு அழுதார். எனது தாயார் இருந்திருந்தால் எவ்வளவு பெரிய பிரச்சனைகளையும் பணிகளையும் முடிப்பதற்கு உதவியாகவும் ஆறுதலாகவும் இருந்திருப்பார் என்று கூறி பேச்சை தொடர முடியாமல் அழுதார். நாங்கள் இருக்கிறோம் எனக் கூறிய ஒவ்வொரு பொதுமக்கள் அவருக்கு ஆறுதல் அளித்தனர்.