நவ.6.
கமல்ஹாசன் நடிக்கும் 234 வது படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்குகிறார். கடந்த 1987 ஆம் ஆண்டில் கமல் நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான நாயகன் திரைப்படம் வெளியானது. 35 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் இணைகின்றனர் கமல்ஹாசன் 234 திரைப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது .ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI,) Madras talkies, ரெட் ஜெயன்ட் மூவிஸ், கை வண்ணத்தில் திரைப்படம் உருவாகிறது.
கமல்ஹாசனின் 232 வது படம் இந்தியன் 2, 233 வது படம் வினோத், 234 வது படம் மணிரத்தினம், 235 வது படம் மகேஷ் நாராயணன் , 236 வது படம் பா .ரஞ்சித் , 237 வது படம் வெற்றிமாறன் இயக்குகின்றனர் என்ற தகவலும் வைரலாகி வருகிறது.