பிப்.18.
கே பி கே தினகரன் குடும்ப உறவுகள் சங்கமம் நிகழ்ச்சி இன்று திருச்சியில் நடைபெற்றது. தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி தினகரனில் பணியாற்றிய ஊழியர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். தாங்கள் பணியாற்றிய நிகழ்வுகளை மகிழ்ச்சியுடன் பரிமாறிக்கொண்டனர்.
சங்கத்தை பதிவு செய்வது என தீர்மானிக்கப்பட்டு தலைவராக பாஸ்கரன் செயலாளராக பொன் சாமி பொருளாளர் ரபீக், துணைத் தலைவர் அண்ணாதுரை மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உறுப்பினர்கள் தங்களது ஆலோசனைகளை வழங்கினர்.
ஐயா கே.பி.கே என்றழைக்கப்படும் கே.பி.கந்தசாமி அவர்களால் நிறுவி அசைக்கமுடியாத சக்தியாக நடைபோட்டு, பின்னர் கே.பி.கே.குமரன் அவர்களால் வெற்றி நடைபோட்ட தினகரன் பதிப்பில் அடங்கிய மாவட்டங்களில் பணியாற்றிய ஊழியர்கள் தாங்கள் பணியாற்றிய சூழல், சவால்களை சந்தித்து நிறுவனத்திற்கு சிறு பாதிப்பும் இன்றி வெற்றி பெற்றது எப்படி?. என்பது பற்றியும், பிரச்சனைகளை தங்களது அணுகுமுறையால் தீர்வு செய்தது குறித்தும் பேசினர். 144 பேர் வாட்ஸ் அப் குழுவில் ஒன்றிணைக்கப்பட்டனர்.
நிகழ்ச்சிக்கு பாஸ்கரன் தலைமை வகித்தார் . முன்னாள் செய்தி ஆசிரியர் பவுன் ராஜ், பொன்னுசாமி, தலைமை பணியாளர்கள் நாராயணன், இசக்கிமுத்து, ரவி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
நீண்ட ஆண்டுகளுக்கு ஒருவர் ஒருவர் நேரில் சந்தித்து நலம் விசாரித்து, பழைய நினைவுகளை
நினைவு கூர்ந்து தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். முன்னதாக மேஜிக் அகஸ்டினின் மேஜிக் நிகழ்ச்சி நடைபெற்றது. எட்வின் ராஜ்குமார், அருள்ராஜ் தொகுத்து வழங்கினர்.