அக்.16.
வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. மழை தொடர்பான புகார்களை தெரிவிக்க மாவட்ட அளவில் மாநில அளவிலும் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. கண்காணிப்பு அதிகாரிகளை தமிழ்நாடு அரசு நியமித்து பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
கரூர் மாவட்டத்தில் இயற்கை இடர்பாடுகளை தெரிவிக்க கலெக்டர் அலுவலகத்தில் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 04324 256306 தொலைபேசி எண்ணில் புகார்கள் தெரிவிக்கலாம். கரூர் தாந்தோணி மலை- ராயனூர் சாலையில் மழை நீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டிருந்தது. அப்பகுதி மக்கள் மேற்கண்ட எண்ணிற்கு புகார் தெரிவிக்க, கரூர் மாநகராட்சி அலுவலர்கள் அப்பகுதிக்கு வந்து பார்வையிட்டு உடனடியாக சிறிய பொக்லைன் இயந்திரத்தை கொண்டு வந்து மண்டியிருந்த முட்பதர்களை அகற்றி மழை நீரை வெளியேற்றினர்.. உடனடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.