நவ.24
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் வேதா நிலையம். இந்த இல்லத்தை அதிமுக அரசு அரசுடைமை ஆக்கியது. இதனை எதிர்த்து தீபா, தீபக் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் ஜெயலலிதாவின் இல்லத்தை அரசுடைமை ஆக்கும் சட்டம் ரத்து செய்யப்பட்டது. வீட்டை தீபக் தீபாவிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜெயலலிதாவின் வேதா இல்லம் குறித்த தீர்ப்பு குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், கட்சித்தலைமை இது பற்றி ஆலோசித்து முடிவெடுக்கும் என்றார்.