கரூர்.பிப்.15.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டம் பிலிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் பயின்று வந்த மாணவிகள் தமிழரசி, சோபியா, இனியா, லாவண்யா, இவர்கள் திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற கால்பந்து விளையாட்டு போட்டியில் பங்கேற்று விளையாடினர். பின்னர் சக மாணவியரோடு ஆற்றின் இக்கரையில் அமைந்துள்ள கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை காவிரி ஆற்றில் குளிக்க இறங்கியுள்ளனர். அப்போது நீரில் மூழ்கிய மாணவி ஒருவரை காப்பாற்ற ஒருவர் பின் ஒருவராக மற்ற மூவரும் நீரில் குதித்து முயன்றுள்ளனர். காப்பாற்ற முயன்றதில் எதிர்பாராத விதமாக ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கினர்.
தகவலறிந்து வந்த கரூர் தீயணைப்புத் துறையினர் விரைந்தனர். தீயணைப்பு வீரர்கள் பரிசல் உதவியோடு ஒரு மாணவியின் சடலத்தை மீட்டனர் மற்றவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம், மாயனூர் செல்லாண்டியம்மன் கோவில் காவேரி ஆற்றுப்படுகையில், தீயணைப்பு படை வீரர்கள் சோபிகா ( 12,) தமிழரசி வயது (13, இனியா வயது (11,)
லாவண்யா (11) ஆகியோரை மீட்டனர். நான்கு மாணவிகளையும் மயங்கிய நிலையில் மீட்டனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.