ஜூன்.23.
அனைத்து தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்து விட்டனர் . ஒற்றைத்தலைமை வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்என கே.பி.முனுசாமி கூறினார்.
சி.வி.சண்முகம்-
இரட்டை தலைமையால் கடுமையாக திமுகவை எதிர்த்து செயல்பட முடியாமல் உள்ளது.இரட்டைத்தலைமையால் ஒருங்கிணைப்பு இல்லாத செயல்பாட்டால் தொண்டர்கள் சோர்வுடன் உள்ளனர். இரட்டைத்தலைமையை ரத்து செய்து, ஒற்றைத்தலைமை தேவை என வலியுறுத்தி கோரிக்கை விடப்படுகிறது. என்றார். அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார்.
ஜூலை 11ல் மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அவர் அறிவித்தார்.
நன்றி உரை புறக்கணித்து ஓ பன்னீர்செல்வம் வெளிநடப்பு செய்தார் .அவருடன் வைத்தியலிங்கம், பிரபாகரன், மனோஜ் பாண்டியன் வெளியேறினர் அப்போது மேடை மீது ஓபிஎஸ்சை நோக்கி தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது.ஓ.பி.எஸ் கையெழுத்து போட்டால்தான் அடுத்த பொதுக்குழு கூட்டம் செல்லும் – பொதுக்குழு மேடையிலிருந்து வெளியேறிய வைத்திலிங்கம் கூறினார்.
எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் நிறைவு பெற்றது அதிமுக பொதுக்குழு.