மே.20 .
வங்கக்கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது . தமிழ்நாட்டில் 23-ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் மே 23-ம் தேதிக்குள் கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று மாலை 4 மணி முதல் மழை பெய்து வருகிறது. கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டி வருகிறது. கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்துள்ளது. மி.மீட்டரில் மழை அளவு –
கடந்த 14ஆம் தேதி 46.40. 15ஆம் தேதி மழை இல்லை. 16ஆம் தேதி 173.1, 17ஆம் தேதி மழை இல்லை. 18ஆம் தேதி 117.60, 19ஆம் தேதி 79.60, இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த நேரத்தில் பதிவான மழை அளவு-
கரூர் 4.4 அரவக்குறிச்சி 12.8 அணைப்பாளையம் 10.4, குளித்தலை 3, தோகைமலை 3.2 கிருஷ்ண ராயபுரம் 1.4, மாயனூர் 1.1, பஞ்சப்பட்டி 2, கடவூர் 21, பாலவிடுதி 20, மயிலம்பட்டி 20. மொத்தம் 103.80 மில்லி மீட்டர்.