பிப்.4.
, ஈரோடு கிழக்கு தொகுதி வீரப்பன்சத்திரம் (வார்டு 17) பகுதி மக்களிடம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் . E.V.K.S இளங்கோவனை ஆதரித்து கரூர் மாவட்ட திமுக செயலாளர் செந்தில் பாலாஜி வாக்கு சேகரித்தார் அவர் பேசியது-
தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் தளபதி ஆட்சிப் பொறுப்பேற்று இந்த ஒன்னரை ஆண்டுகளில்தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை ஏறத்தாழ 85% நிறைவேற்றி தந்திருக்கிறார். நீங்கள் பஸ்ஸில் போனால் டிக்கெட் எடுக்கிறீர்களா?(இல்லை என பெண்கள் குரல்) ஆனா சில பேர் இதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்.
தளபதி அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பெண்கள் இலவசமாக சென்று வருவதற்கு வழிவகை செய்துள்ளது. ஆனால் மோடி அரசாங்கம் மக்களுக்கு என்ன கொடுத்து இருக்கிறது. 410 ரூபாய்க்கு விற்ற சமையல் எரிவாயு சிலிண்டர் இன்றைக்கு ரூ. 1150. சில பகுதிகளில் ரூ. 1200 .
கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். யார் நமக்கான முதலமைச்சர். ஏழை மக்களுக்கான திட்டங்களை தரக்கூடிய முதலமைச்சர் நமது முதலமைச்சர் தான். சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் என அறிவித்தனர் அதையும் நிறுத்தி விட்டார்கள்.
ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த ஒன்னரை ஆண்டுகளிலேயே
இதுமட்டுமின்றி, மகளிர் சுய உதவி குழுக்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி- நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இல்லம் தேடி கல்வி திட்டம், மக்களை தேடி மருத்துவம்திட்டம், நம்மைக் காக்கும் திட்டம் 48. புதுமைப்பெண் திட்டம். ஒன்றரை ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இப்படி வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை நமது முதலமைச்சர் நமக்காக தந்து கொண்டு இருக்கிறார். இந்த சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. அவர்கள். எங்களிடம் எல்லாம் சட்டமன்றத்தில் பார்க்கின்ற போது ஒரு சகோதரனைப் போல பழகியவர் திருமகன். அவர் விட்டு சென்ற பணிகளை தொடர்ந்து இப்பகுதிக்கு செய்வதற்கும் முதல்வரின் சாதனை திட்டங்களை மேலும் உங்களிடம் தொடர்ந்து கொண்டு வந்து சேர்ப்பதற்கும் கை சின்னத்தில் போட்டியிடுகின்ற காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவர் ஈ.விகே.எஸ். இளங்கோவன் அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.