ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. ஹைதராபாத் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் சிஎஸ்கே அணியில், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அஜிங்க்ய ரஹானே ஓப்பனிங் செய்தனர். இதில் ரஹானே 12 பந்துகளிலேயே 9 ரன்களிலேயே ஷபாஸ் அஹமதுவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய டேரி மிட்செல் நிதானமாக ஆடி ஏழு பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் என 32 பந்துகளில் 52 ரன்கள் விளாசினார். அடுத்து வந்த ஷிவம் துபே, ருதுராஜ் உடன் இணைந்து சிறப்பாக ஆடினார். நான்கு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 20 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடினார்.கேப்டன் ருதுராஜ் இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தினால் . மூன்று சிக்ச்ஸர்கள், பத்து பவுண்டரிகள் என விளாசி 98 ரன்கள் குவித்தார். சதம் அடிக்கும் வேளையில் 19.2வது ஓவரில் சிக்ஸர் அடிக்க முயன்று அவுட் ஆகி வெளியேறினார்.
இறுதி ஓவரில் ரசிகர்களின் ஆரவாரமான வரவேற்புடன் இறங்கிய தோனி முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து இரண்டு பந்துகளில் ஐந்து ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 212 ரன்கள் குவித்திருந்தது. தோனி, துபே இருவரும் அவுட் ஆகாமல் இருந்தனர்.
அடுத்து 213 ரன்கள் என்ற இலக்குடன் பேட்டிங் இறங்கிய ஹைதராபாத் அணி தொடக்க ஆட்டக்காரர்கள் கடிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மாஅதிரடியாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 13 மற்றும் 15 ரன்களில் வெளியேறினர்.இம்பாக்ட் பிளேயராக களமிறங்கிய அன்மோல்ப்ரீத் டக் அவுட் ஆனார். அணி ஆட்டம் கண்டுவிட்டது. எய்டன் மார்க்ரம் அதிகபட்சமாக 26 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஸ்கோரை ஏற்றினார். எனினும் பத்தாவது ஓவரில் பதிரானா வீசிய பந்து மிடில் ஸ்டம்ப்பை பதம் பார்த்தது.அடுத்து நிதிஷ் குமார் 15 ரன்கள், கிளாசன் 20 ரன்கள், அப்துல் சமத் 19 ரன்கள், ஷபாஸ் அஹமது 7 ரன்கள், பேட் கம்மின்ஸ் 5 ரன்கள், உனட்கட் 1 ரன் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை சிஎஸ்கே. வீரர்கள் வீழ்த்தினர். இதனால் 18.5 ஓவர்களில் ஆல் அவுட் ஆகினர். 213 என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி 134 ரன்களில் சுருண்டது. 78 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது.