• கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
Thursday, June 19, 2025
Karurxpress
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
Karurxpress
No Result
View All Result
Home விளையாட்டு

ஐ.பி.எல்.கிரிக்கெட்: சி.எஸ்.கே. த்ரில் வெற்றி: கு‌ஜராத்தை சுருட்டி வீசியது

karurxpress by karurxpress
May 30, 2023
in விளையாட்டு
0
ஐ.பி.எல்.கிரிக்கெட்: சி.எஸ்.கே. த்ரில் வெற்றி:  கு‌ஜராத்தை சுருட்டி வீசியது
248
VIEWS

Kabali song for MS Dhoni’s entry against Gujarat Titans in Qualifier 1.

???? @vdjzen pic.twitter.com/9s5LxjkVde

— CricketGully (@thecricketgully) May 23, 2023
மே.30.

-16 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 31-ந் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியின் ‘லீக்’ ஆட்டம் கடந்த 21-ந் தேதி முடிவடைந்தது. இதன் முடிவில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன. ராஜஸ்தான், பெங்களூரு, கொல்கத்தா, பஞ்சாப், டெல்லி, ஐதராபாத் ஆகிய அணிகள் 5 முதல் 10-வது இடங்களை பிடித்து வெளியேறின. ‘பிளே ஆப்’ சுற்று கடந்த 23-ந் தேதி தொடங்கியது. சேப்பாக்கத்தில் நடந்த முதல் தகுதி சுற்றில் (குவாலிபையர்-1) சென்னை சூப்பர் கிங்ஸ் 15 ரன் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது.
24-ந் தேதி சேப்பாக்கத்தில் நடந்த வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) மும்பை அணி 81 ரன் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி வெளியேற்றியது. 26-ந் தேதி அகமதாபாத்தில் நடந்த ‘குவாலிபையர்-2’ போட்டியில் குஜராத் அணி 62 ரன் வித்தியாசத்தில் மும்பையை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

சென்னை சூப்பர் கிங்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் ஐ.பி.எல். இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நேற்றுமுன்தினம் இரவு 7.30 மணிக்கு தொடங்க இருந்தது. ஆனால் மழையால் இறுதிப்போட்டி பாதிக்கப்பட்டது. தொடர்ந்து பெய்த பலத்த மழையால் குறைந்த அளவு ஓவர்கள் வைத்து கூட நடத்த இயலாமல் போனது.
இதனால் ஆட்டத்தை கைவிடுவதாக இரவு 10.55 மணியளவில் நடுவர்கள் அறிவித்தனர். மாற்றுதினமான இன்று ஐ.பி.எல். இறுதிப்போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இன்றைய இறுதிப் போட்டியும் ஒரு வேளை மழையால் பாதிக்கப்பட்டால் குஜராத் டைட்டன்ஸ் அணி ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மழையால் இரவு 9.40 மணிக்கு முன்பு ஆட்டம் தொடங்கினால் ஓவர்கள் குறைக்கப்படாமல் விளையாடப்படும். 9.45 மணிக்கு தொடங்கினால் 19 ஓவர்களாக குறைக்கப்படும். 10 மணிக்கு 17 ஓவர்களாவும், 10.30 மணிக்கு 15 ஓவர்களாகவும் குறைக்கப்படும். நள்ளிரவு 12.30 மணிக்குள்ளாக ஆட்டம் தொடங்க வாய்ப்பு கிடைத்தால் ஒரு அணிக்கு தலா 5 ஓவர்கள் வீதம் ஆடப்படும்.
அதுவும் முடியாவிட்டால் போட்டி சூப்பர் ஓவருக்கு செல்லும். நள்ளிரவு 1.20 மணிக்குள் ஆடுகளம் விளையாட தயாராக இருந்தால் சூப்பர் ஓவர் நடைபெறும். சூப்பர் ஓவரும் நடத்த இயலாமல் போனால் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து இருந்ததால் குஜராத் அணி ஐ.பி.எல். கோப்பையை வெல்லும். அந்த அணி ‘லீக்’ முடிவில் 10 வெற்றி, 4 தோல்வியுடன் 20 புள்ளிகள் பெற்று இருந்தது. சி.எஸ்.கே. 8 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை ஆகியவற்றுடன் 17 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்தது. இன்று மழை பெய்ய 10 சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய தகவல் தெரிவிக்கின்றன. மழையால் முழுவதுமாக பாதிக்கப்பட்டால் டோனியால் 5-வது ஐ.பி.எல். கோப்பை கனவு நனவாகாமல் போய்விடும். தனது கடைசி தொடரில் கோப்பையுடன் விடைபெறும் ஆர்வத்தில் டோனி உள்ளார். போட்டி முழுமையாக நடைபெற்று சிறப்பாக ஆடி அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்று முழுமையாக எதிர்ப்பு ரசிகர்களிடம் இருந்தது.

எதிர்பார்ததைப்போலவே கடைசி இரண்டு பந்துகளில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டு சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. ஐந்தாவது முறையாக கோப்பையை அதிரடியாக கைப்பற்றியது.

இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் ‘டாஸ்’ வென்ற சென்னை கேப்டன் டோனி, முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 214 ரன்கள் குவித்தது. அடுத்து விளையாடிய சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ரன் தேவைப்பட்டது. உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டது. கடைசி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மொகித் ஷர்மா வீசினார்.

This moment is ♾️????????#IPL2023Final #CSKvGT #WhistlePodu #Yellove ????????pic.twitter.com/6BCgehszxy

— Chennai Super Kings (@ChennaiIPL) May 29, 2023

முதல் 4 பந்தில் 3 ரன் மட்டுமே கிடைத்தது. பரபரப்பு அதிகமாகியது. கடைசி 2 பந்தில் 10 ரன் தேவையாக இருந்தது. 5-வது பந்தை எதிர்கொண்ட ஜடேஜா சிக்சர் தூக்கியதுடன் கடைசி பந்தில் பவுண்டரி விரட்டி சென்னை அணிக்கு திரில் வெற்றியை தேடிதந்தார். சி.எஸ்.கே.அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. போட்டி முடிந்த பின்னர் வெற்றி கொண்டாட்டத்தில் ஜடேஜாவை தூக்கி வைத்து டோனி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அகமதாபாத்: 16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் குஜராத் – சென்னை அணிகள் மோதின. முடிவில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது. போட்டி முடிந்த பின்னர் வெற்றி கொண்டாட்டத்தில் ஜடேஜாவை தூக்கி வைத்து டோனி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Related Posts

ஸ்ரேயாஸ் அசால்ட்: ஆர்சிபி. சாம்பியன் ஆனது

ஸ்ரேயாஸ் அசால்ட்: ஆர்சிபி. சாம்பியன் ஆனது

by karurxpress
June 4, 2025
0

2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் தோல்வியடைய மஸ்ரேயாஸ் ஐயர் காரணமாகி...

முதன்முதலாக கோப்பையை கைப்பற்றுவது யார்?. ஸ்ரேயாஸ்- கோலி பலப்பரீட்சை:

முதன்முதலாக கோப்பையை கைப்பற்றுவது யார்?. ஸ்ரேயாஸ்- கோலி பலப்பரீட்சை:

by karurxpress
June 2, 2025
0

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் தற்போது கிளைமாக்ஸில் ஆர்சிபி - மற்றும்...

கரூரில் செமி இன்டோர் கூடைப்பந்து மைதானம்

கரூரில் செமி இன்டோர் கூடைப்பந்து மைதானம்

by karurxpress
May 28, 2025
0

கரூரில் அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் நடைபெற்றன. கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் வெற்றி...

வலிமையோடு திரும்புவோம்- டோனி பேட்டி

வலிமையோடு திரும்புவோம்- டோனி பேட்டி

by karurxpress
May 26, 2025
0

https://twitter.com/ChennaiIPL/status/1926865622316560679?t=4r3buhAGO1RlpBlU63sfvw&s=19 அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் 67-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் -...

Load More
  • Trending
  • Comments
  • Latest
கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

May 14, 2024
கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

May 20, 2024
வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

November 19, 2024
ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

April 26, 2025

கரூர் மாவட்ட திமுக முன்னோடிகள் 270பேருக்கு பொற்கிழி முப்பெரும் விழாவில் செந்தில்பாலாஜி வழங்கினார்

0

ரூ 750 கோடியில் காவிரியில் தடுப்பணை குளித்தலை அருகே அமைச்சர் ஆய்வு

0

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் கரூர் மாவட்டம் இரண்டாம் இடம்

0

இல்லாத நிறுவனத்தின் ஆய்வறிக்கை பெற்று இயங்கிய கல்குவாரிகளால் பல கோடி அரசுக்கு இழப்பு ஆலோசனை கூட்டத்தில் அதிர்ச்சி தகவல்

0
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் செயற்கை கால் பொருத்தி பயனடையலாம்

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் செயற்கை கால் பொருத்தி பயனடையலாம்

June 17, 2025
கதவு உடைத்து கொள்ளையடித்த நகைகள் மீட்பு: 3பேர் கைது

கதவு உடைத்து கொள்ளையடித்த நகைகள் மீட்பு: 3பேர் கைது

June 16, 2025
608 பேருக்கு ரூ.1.59 கோடி கல்வி, மருத்துவ நிதி விஎஸ்பி. வழங்கினார்

608 பேருக்கு ரூ.1.59 கோடி கல்வி, மருத்துவ நிதி விஎஸ்பி. வழங்கினார்

June 16, 2025
ஆயுதங்களுடன் ரீல்ஸ்- பாலத்தில் கேக்வெட்டி ரகளை: 10பேர் கைது

ஆயுதங்களுடன் ரீல்ஸ்- பாலத்தில் கேக்வெட்டி ரகளை: 10பேர் கைது

June 14, 2025
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved

No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved