மார்ச்.26.
17 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த 22ஆம் தேதி சென்னையில் தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இன்று இரவு சென்னையில் நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. குஜராத் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்ய, சிஎஸ்கே அணியில் கெய்க்வாட் -ரச்சின் ரவீந்தரா களமிறங்கி அதிரடி ஆட்டம் ஆடினர். ரவீந்தரா 20 பந்துகளில் 46 ரன், கெய்க்வாட் 46 ரன் விளாசினர். அடுத்து சிவம்துபே 23 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து புயல் வேக ஆட்டம் ஆடினார். சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது.
அடுத்த ஆடிய குஜராத் அணி வீரர்கள் விருதுமான் சகா, சுக்மன்கில், விஜய் சங்கர், டேவிட் மில்லர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். சாய் சுதர்சன் சிறப்பாக ஆடி 37 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே அணி பந்து வீச்சில் குஜராத் அணி வீரர்கள் தடுமாறினர். முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 63 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது. தனது இரண்டாவது வெற்றியை சிஎஸ்கே பெற்றுள்ளது.




