பிப்.12.
போதை பொருள்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் நடமாட்டம் குறித்து, புகார்களை பதிவு செய்ய மொபைல் செயலி (Mobile App) DRUG FREE TN” பதிவிறக்கம் செய்வது தொடர்பாக, செயல் விளக்க கூட்டம் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.
போதை பொருள்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் நடமாட்டம் குறித்து, புகார்களை பதிவு செய்ய மொபைல் செயலி (Mobile App) DRUG FREE TN பதிவிறக்கம் செய்வது மற்றும் அதில் புகார்களை பதிவு செய்தல் குறித்து மாணவர்களுக்கு தெரிவிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பிரதி வாரம் பள்ளி / கல்லூரிகளில் ANTI DRUG CLUB போதை பொருள் ஒழிப்பு குழு கூட்டம் மாணவர்கள் மத்தியில் நடத்தி ஆவணப்படுத்தி அறிக்கையாக அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டது. மாணவ, மாணவியர்களின் நலன் காக்க பள்ளி / கல்லூரிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு குழுக்கள் – மாணவர்கள் மத்தியில் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தப்படுத்துதல்- போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்யும் விதமாக மாணவர்களுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்தி தருமாறும் அனைத்து பள்ளி/கல்லூரி தலைமை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் உதவி ஆணையர் (கலால்) கருணாகரன். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (மது விலக்கு மற்றும் அமலாக்கம்). பிரபாகரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுகாணந்தன், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சக்திபால கங்காதரன், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட பிறப்படுத்தடோர் மற்றும் சிறுப்பான்மையினர் நல அலுவலர், காவல்துறையினர், மாவட்ட சுகாதார அலுவலர், தொழில்நுட்ப கல்லூரி முதல்வர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.