பிப்.15.
தமிழ்நாடு பெயிண்டிங் காண்ட்ராக்டர் அசோசியேசன் கரூர் கிழக்கு மாவட்ட ஆண்டு விழா பொறுப்பாளர்கள் பதவி ஏற்பு கரூரில் இன்று நடைபெற்றது. மாநில தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வைத்து பேசினார். மாநில பொதுச் செயலாளர் செல்வராஜ் , மாநில பொருளாளர் பொருளாளர் ராஜன், பேரவை தலைவர் அசரபப்அலி, துணை தலைவர் தங்கவேலு, துணை பொது செயலாளர் ஆரோக்கியராஜ், முன்னிலை வகித்தனர் . கிழக்கு மாவட்ட தலைவர் ஜஸ்டின் ராமன், செயலாளர் சந்தர் சேகர், பொருளாளர் தாமோதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநில தலைவர் பன்னீர்செல்வம் கூறுகையில்,
வட மாநில தொழிலாளர்கள் வருகையால் பெயிண்டிங் தொழில் ஈடுபட்டுள்ள நமது தொழிலாளர்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.வடமாநில தொழிலாளர் வருகையை அரசு கட்டுப்படுத்த வேண்டும். மேலும் வட மாநிலங்களில் குற்ற செயல் புரிந்தவர்களை அம் மாநில காவல் துறையினர் இங்கு வந்து பிடித்து செல்கின்றனர். வேலைவாய்ப்புக்கு மட்டுமின்றி பாதுகாப்புக்கும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது . தனி நல வாரியம் அமைக்க வேண்டும். படித்தவர்கள் துறைக்கு வர தமிழக அரசு பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றார்.