கரூர். ஜன.31.
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் குளறுபடிகளை போக்காமல் குறை கூறும் ஆளுநருக்கு செல்வ பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொதுக் கணக்குக் குழுத்தலைவர் கு. செல்வபெருந்தகை தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் சார்பு செயலாளர் முனைவர் கி.சீனிவாசன். குழு உறுப்பினர்கள் / சட்டமன்ற உறுப்பினர்கள் ஈ.ஆர்.ஈஸ்வரன் (திருச்செங்கோடு), அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (போளூர்), எஸ்சேகர் (பரமத்திவேலூர்) , ஆ.கிருஷ்ணசாமி (பூந்தமல்லி), டாக்டர் சி.சரஸ்வதி(மொடக்குறிச்சி), க.கார்த்திகேயன்(ரிஷிவந்தியம்), மாவட்ட ஆட்சித்தலைவர் மீ-தங்கவேல்,, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.பிரபாகர், சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.மாணிக்கம் (குளித்தலை), ஆர்.இளங்கோ (அரவக்குறிச்சி), .க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), ஆகியோர் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டனர்.
இக்கூட்டத்தில் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் தணிக்கை பத்திகள் தொடர்பாக மாசு கட்டுபாட்டு வாரியம், வணிக வரித்துறை, தொல்லியல் துறை, எரிசக்தி துறை தோட்டக்கலைத்துறை, வேளாண்மை துறை, கால்நடை பராமரிப்பு துறை, ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் விளக்கங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.
இந்த ஆய்வு கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொதுக் கணக்குக் குழுத்தலைவர் பேசுகையில் தெரிவித்ததாவது.-
பொதுமக்கள் வரியாக செலுத்தும் தொகையில் நடைபெறும் பொதுமக்களுக்கான வளர்ச்சித்திட்ட பணிகள் பொதுமக்களை முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதற்காக வளர்ச்சித்திட்ட பணிகளுக்கான திட்ட செயலாக்க நடைமுறைகளில் அரசு தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு மேற்கொண்டு மக்களின் வழி பணம் முறையாக யாக செலவிடப்படுவதை உறுதி செய்வது பொது கணக்கு குழுவின் பணியாகும். எனவே அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் திட்ட பணிகளை அரசு வரைமுறைகளின் படி முழுமையாக குறித்த காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் கரூர் மாவட்டத்தில் அரசு திட்டப்பணிகள் விரைவாகவும், செம்மையாகவும் நடைபெறுவதற்காக பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் செல்வப் பெருந்தகை தெரிவிக்கையில்,
பள்ளிக்கூடங்கள் நல்ல முறையில் இயங்கி வருகிறது. மாணவியர்கள் மற்றும் பெண் ஆசிரியர்கள் பணி புரியும் பள்ளியில் நாப்கின் எரியூட்டும் இயந்திரங்கள் வைக்க சொல்லி அறிவுறுத்தி அதை 24 மணி நேரத்தில் வைப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.
அதேபோல் பெண்கள் விடுதிக்கு செல்லும் சாலையில் விளக்குகளும் துணி காய வைப்பதற்கள்ள வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்க கேட்டனர்.
கரூர் மாநகராட்சி ஆணையர் மூலம் இரண்டு மணி நேரத்தில் அந்த பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் தொடர்பு கொண்டு பேசியதின் அடிப்படையில் இந்த பணி இவ்வளவு விரைவாக நடைபெற்று உள்ளது. மிகவும் அற்புதமான எளிமையான மாவட்ட ஆட்சித் தலைவர் இந்த மாவட்டத்தில் பணிபுரிந்து வருகிறார் . குடிநீர் தட்டுப்பாடு போக்க ஒரு ஆய்வு அறிக்கையை கேட்டிருக்கிறோம்.
மாண்புமிகு ஆளுநர் திருவாரூர் மாவட்டத்தில் பயணம் மேற்கொள்ளும் போது பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தை தமிழ்நாடு அரசு சரியாக பயன்படுத்தவில்லை என்று கூறி இருக்கிறார். இது முற்றிலும் தவறானது. கரூர் வந்தவுடன் இங்கு ஒரு அறிக்கையை எங்களுக்கு அளித்திருக்கிறார்கள். அந்த அறிக்கையின் படி ஆளுநர் அவர்கள் அதைப் படித்துப் பார்த்துவிட்டு சரியா தவறா என்று சொல்ல வேண்டும்.
2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி கரூர் மாவட்ட பயனாளிகள் 13442 பேர் என்றும் அதில் 10.355 பேரை காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளார்கள் இதுவரை அதற்கு பதில் இல்லை. அதன் பிறகு 3057 பயனாக தேர்வு செய்யப்படுகிறார்கள். அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு தகுதியானோர் என்று 4552 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அதில் 2400 நபர்களுக்கு மட்டுமே வீடு கட்ட அனுமதி வந்துள்ளது. மீதமுள்ள 2143 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான அனுமதி ஒன்றிய அரசிடமிருந்து வரவில்லை ஆளுநர் அவர்கள் இந்த அனுமதியை பெற்று தர வேண்டும். இதில் நிறைய குளறுபடிகள் இருக்கிறது. பயனாளிகள் இறந்து விட்டால் இதற்கான பிரதியாக இணையதள போர்டலில் இருந்து அவர்களின் பெயரை எடுக்க முடியவில்லை. இதே போல் தமிழ்நாட்டில் எல்லா மாவட்டத்திலும் இந்த பிரச்சனை இருக்கிறது. இவ்வளவு பிரச்சனைகளை வைத்துக்கொண்டு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தை தமிழக அரசு சரியாக பயன்படுத்தவில்லை என்று பொத்தாம் பொதுவாக யாரோ பேசுவது போல் பேசி இருப்பது உண்மையில் வருத்தம் அளிக்கக்கூடிய செய்தியாகும் ஆவணங்கள் பார்த்து அவர் தான் பதில் சொல்லண்டும்.
50 சதவீதத்திற்கு மேல் உள்ள பயனாளிகளின் பெயரை போர்டலில் இருந்து எடுக்க முடியவில்லை. அதை யார் செய்வது?. உண்மையான பயனாளிகளை யார் கண்டுபிடிப்பது. ஒன்றிய அரசு வீடு கட்டும் திட்டத்திற்கு 40 விழுக்காடுகள் தொகை ஒதுக்குகிறது என்றால் மாநில அரசு 60 விழுக்காடு பணம் கொடுக்கிறது. எந்த அரசாக இருந்தால் என்ன?. மாநில அரசின் பங்கு 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளபோது சொந்தம் கொண்டாட முடியாது. இது ஒரு மத்திய மாநில அரசு இணைந்து செயல்படுத்தும் வளர்ச்சி திட்டமாகும் இதை ஆளுநர் அவர்கள் விளக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்கள்.ம.கண்ணன். கவிதா(நிலம் எடுப்பு), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீலேகாதமிழ்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.