அமைப்புசாரா தொழிலாளர்களின் தேசிய தரவுத்தளம்
இத்திட்டத்தின் நோக்கம்
இந்திய அரசின் eShram என்றழைக்கப்படும் இத்திட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களின் விவரங்களை பதிவு செய்துகொள்ள எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. இத்திட்டம் அனைத்து CSC பொது சேவை மையங்களிலும் நடைபெற்று வருகிறது. அமைப்பு சாரா தொழிலாளர்களின் தரவுகள் இதில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதனால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் சலுகைகள் நேரடியாக அவர்களுக்கு சென்றடைகிறது.
இந்த தரவுகளை பதிவேற்றம் செய்த பிறகு பயனாளிகளுக்கு UAN என்ற 12 இலக்க எண் வழங்கப்படும். வேலை காரணங்களுக்காகவோ அல்லது வேறு ஏதும் காரணங்களுக்காக இவர்கள் புலம்பெயர நேர்ந்தால் இவர்களுக்கு அரசிடமிருந்து சேரவேண்டிய சலுகை இவர்களது வங்கி கணக்கில் நேரடியாக அரசால் வழங்கப்படும்.
இந்த தரவுத்தளம் தொழிலாளர்களின் தொழில் திறமையை வகைப் படுத்தவும், தொழிலாளர்களின் திறமைக்கு ஏற்றவாறு வேலை வாய்ப்புகளை உருவாக்கிடவும் உதவும்.
ESI, PF, INCOME TAX செலுத்துபவர்கள் இத்திட்டத்தில் இணைய முடியாது.
உச்சநீதிமன்ற ஆணையின்படி இந்த தரவுகள் பதிவு ஏற்றத்தை டிசம்பர் மாதம் 31ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும்.
தகுதி வாய்ந்தவர்கள் தாமதிக்காமல் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்
- ஆதார் அட்டை,
- ஆதாரில் இணைக்கப்பட்ட மொபைல் எண் OTP மூலம் அல்லது கைரேகை மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
- வங்கி கணக்கு புத்தகம்.
வயது 16 – 59 வயதிற்குள் இருக்க வேண்டும் (27.08.1961 முதல் 26.08.2005).
Contact
SPIDER NET TECH. E SEVAI MAIYAM. CSC. CHELLA CHAMBER. OPP AJANTHA THEATRE COVAI ROAD. KARUR