ஏப்.6.
கரூர் எம்பி தொகுதியில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், விராலிமலை, வேடசந்தூர், மணப்பாறை சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. விராலிமலை சட்டமன்ற தொகுதியில் நடைபெற்று வரும் தேர்தல் பணிகளை இன்று கரூர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியும், கரூர் மாவட்ட கலெக்டருமான தங்கவேல், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விராலிமலை சட்டமன்ற தொகுதியில் உள்ள ஆண் வாக்காளர்கள் 1,09,070 பேர். பெண் வாக்காளர்கள் 1.41,486 பேர் மற்றும் முன்றாம் பாலின வாக்காளர்கள் 15 உள்ளிட்ட மொத்தம் 2.21.927 வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் 255 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 1224 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளது. இந்த மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இலுப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் வருகின்ற 08.04.2024 மற்றும் 09.04.2024 ஆகிய நாட்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்குச்சீட்டு பொறுத்தும் பணி நடைபெறவுள்ள இடத்தில் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் அமரும் உங்கள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், இழுப்பூரில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நாளன்று வாக்குச்சாவடியில் பணிபுரியவுள்ள 1200 அலுவலர்களுக்கு நாளை 07.04.2024 அன்று இரண்டாம் கட்ட பயிற்சி நடைபெறவுள்ளது. பயிற்சி பெற வரும் அலுவலர்கள் தபால் வாக்குகள் அளிக்கும் வகையில் சிறப்பு மையம் (Specialization Center) அமைக்கப்பட வேண்டும் அவர்களுக்கு குடிநீர், மின்விசிறி மற்றும் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மேலும் கண்டறியப்பட்ட 6 பதட்டமான வாக்குச்சாவடி மையங்களிலும் மற்றும் பிற வாக்குச்சாடிகளில் எத்தனை சதவீதம் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்பதை கணக்கிட்டு பணிகளை முடிக்க வேண்படும். மேலும் அனைத்து பதட்டமாண வாக்குச்சாலாடி மையங்களிலும் பயிற்சி பெற்ற நுண் பார்வையாளர்களை நியமித்து வாக்குபதிவு அன்று கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் நடத்தும் அதிகாரி / மாவட்ட கலெக்டர் தங்கவேல் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். விராலிமலை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தெய்வநாயகி வட்டாட்சியர் சூரியபிரபு உள்ளிட்ட தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.