மே.12.
சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அமைச்சராக டிஆர்பி ராஜாவுக்கு கவர்னர் ஆர் என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார் . முதலமைச்சர் மு .க.ஸ்டாலின் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அமைச்சர் ஆகியுள்ள ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிதியமைச்சராக தங்கம் தென்னரசு, தகவல் தொழில்நுட்ப அமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பால்வளத் துறை அமைச்சராக மனோ தங்கராஜூம் பொறுப்பு வகிக்கின்றனர், செய்தி தகவல் அமைச்சர் சாமிநாதனுக்கு தமிழ் வளர்சித்துறை கூடுதலாக ஒதுக்கீடு. செய்யப்பட்டுள்ளது.
பி.டி.ஆர். அறிக்கை
அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் , உலகளவில் இன்று முதலீடு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான நம்பர் 1 துறையாக விளங்கும் தகவல் தொழில்நுட்ப இலக்காவை மாண்புமிகு முதலமைச்சர் எனக்குத் தற்போது வழங்கியதற்கு நான் நன்றியுள்ளவனாவேன்.
15 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முன்னோடியான உலகளாவிய திறன் மையத்தை நிறுவி நிருவகித்ததன் மூலம் நான் பெற்ற சொந்த அனுபவமும், எனது தொழில் வாழ்வில் பெற்ற IT & ITES தொழில்துறையுடனான தொடர்புகளும் இந்த அமைச்சகப் பொறுப்பில் நான் மேற்கொள்ளும் முயற்சிகளுக்குப் பயனளிக்கும் என நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.