டிச.9.
இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணம் “ககன்யான்” 2023-ஆம் ஆண்டு தொடங்கும் என மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணம் “ககன்யான்” 2023-ஆம் ஆண்டு தொடங்கும் என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு) பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன் பொதுமக்கள் குறைதீர்வு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர், இதன் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய நாடுகளில், அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 4-வது இடத்தைப் பிடிக்கும் என்று கூறினார்.
2022-ஆம் ஆண்டு இந்திய வானியல் நிபுணர்கள், ககன்யான் மூலம் விண்வெளிப் பயணத்தை மேற்கொள்வார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி, 2018-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று உரையாற்றுகையில் தெரிவித்ததை சுட்டிக்காட்டிய அமைச்சர், கொரோனாத் தொற்று பரவல் காரணமாக இது தாமதம் அடைந்துள்ளதாக தெரிவித்தார்.