நவ.1.
டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்று போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது .குரூப் இரண்டில் இடம் பிடித்த இந்திய அணி முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், இரண்டாவது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்தது. இதனால் புள்ளி பட்டியலில் இந்தியா நான்கு புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை வகிக்கிறது. 5 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா அணி முதல் இடத்தில் உள்ளது. 4 புள்ளிகளுடன் வங்கதேச அணி இருக்கிறது. 4புள்ளிகள் பெற்றும்கூட ரன் ரேட் அடிப்படையில் 3வது இடத்தில் உள்ளது. இந்த நிலவரப்படி பார்த்தால் இந்தியாவுக்கு இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளன. இரண்டிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
நாளை அடிலெய்டு ஓவன் மைதானத்தில் வங்கதேச அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது . இந்த போட்டியின் முடிவுதான் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடம் பிடிக்கும் அணி எது என்பதைத்தீர்மானிக்கும்.
எனினும் இந்த மைதானத்தில் 95% மழை பெய்ய வாய்ப்புள்ளது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். போட்டி நடைபெறும் நாளில் மைதானம் சாதகமாக இருக்காது போட்டியே கைவிடப்படும் நிலையும் ஏற்படலாம். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்பட்சத்தில் இரு அணிகளும் மீண்டும் சம நிலைக்கு வரும். எனவே வழக்கம்போல் மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை எதிர்பார்த்து அடுத்த இடத்திற்கு செல்ல வேண்டிய டென்ஷனுக்கு இந்திய அணி தள்ளப்படுகிற நிலைமை உருவாகி வருகிறது ன.