அக்.14.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய பாகிஸ்தான் 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த 191 ரன்களில் சுருண்டது. 192 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணியின் ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் களமிறங்கினர். விராட் கோலி நிலைப்பார் என நினைத்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவரும் 16 ரன்களில் ஆட்டம் இழந்தார். 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டை இழப்புக்கு இந்திய அணி 79 ரன்களைச் சேர்த்திருந்தது.ரோகித் சர்மாவுடன் ஸ்ரேயாஸ் ஐயர் இணைந்து விளாசினார். ஆட்டம் சூடுபிடித்தது. இந்த இணையை பிரிக்க முடியாமல் பாகிஸ்தான் பவுலர்கள் திணறினர். மைதானம் முழுக்க ‘இந்தியா’ என முழக்கங்கள் ஒலிக்க சிக்சர்கள் பறந்தன.
சதத்தை நோக்கி அதிரடி காட்டிய ரோகித், ஷஹீன் அப்ரிடி வீசிய ஸ்லோ பாலை தூக்கி அடித்தபோது அது இஃப்திகார் அகமது கேட்ச் பிடித்தார் . 6 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் என 63 பந்துகளில் 86 ரன்கள் எடுத்தார் ரோகித். 22 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 158 ரன்களைச் சேர்த்திருந்தது.இறுதியில் 30ஆவது ஓவர் 3வது பந்தில் ஸ்ரேயாஸ் பவுண்டரி அடித்து தனது அரைசதத்தை எட்ட வெற்றி இலக்கும் எட்டப்பட்டது. ஸ்ரேயாஸ் ஐயர் 53 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 19 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் 8-ஆவது முறையாக பாகிஸ்தானை வீழ்த்தியிருக்கிறது இந்தியா.