நவ.2.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று வங்கதேச அணியை இந்திய அணி எதிர் கொண்டது. இந்திய அணி பேட் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. விராட் கோலி அபாரமாக ஆடி 44 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். ராகுல் 32 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார்.
அடுத்து வங்கதேச அணி அதிரடியாக விளையாடியது. லிடன் தாஸ் 21 பந்துகளில் அரை சதம் அடித்தார். 6ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 60ரன்கள் குவித்தது. மழை பெய்ததால் டக் ஒர்த் லூயிஸ் விதியின் படி 16 ஓவர்களில் 151 ரன்கள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மீதமுள்ள ஒன்பது ஓவர்களில் 85 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயம் வங்கதேசத்துக்கு ஏற்பட்டது. லிடன் தாஸ் விகெட்டை அஸ்வின் கைப்பற்றினார். 27 பந்துகளில் 60 ரன்களை குவித்து மிரட்டிய அவர் அவுட் ஆனதால் ஆட்டத்தின் போக்கு மாறியது. தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தது. ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார் அர்ஷ்தீப்சிங்.
கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 14ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 16 ஓவர்களில் 6 விக்கெட் ப்புக்கு 145 ரன்கள் எடுத்து வங்கதேச அணி தோல்வியை தழுவியது. டி/எல் முறையில் 5ரன் வித்தியாசத்தில் பரபரப்பான ஆட்டத்தில் வங்கதேசம் அணியை இந்திய அணி வீழ்த்தியது.
விராட்கோலி சாதனை
டி20 உலக கோப்பை போட்டியில் விராட் கோலி 16 ரன்கள் எடுத்த போது அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இலங்கை வீரர் ஜெயவர்த்தனே 1016 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அதை முறியடித்து முதல் இடத்தை பிடித்துள்ளார் விராட்.