ஆக28.
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெறுகிறது. இன்றைய ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் விளையாடின .முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி விக்கெட்களை பறிகொடுக்க தொடங்கியது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால் 19.5 ஓவரிலேயே 147 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. எனினும் கடைசி நேரத்தில் ஹரிஸ்ரவூப் 13 ரன்கள்(7 பந்துகளில்), தாஹானி ஆறு பந்துகளில் 16 ரன்களும் குளித்தனர் . இந்திய அணி வீரர்கள் புவனேஸ்வர் நான்கு விக்கெட், ஹர்த்திக் பாண்ட்யா 3விக்கெட் வீழ்த்தினர். ஹர்திக் பாண்ட்யா சிறந்த ஆட்டக்கா ரராக தேர்வு செய்யப்பட்டார். அவர் 4ஓவரில் 25 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அடுத்த ஆடிய இந்திய அணி 19.4 ஓவர்களிலேயே ஐந்து விக்கெட் இழப்பிற்கு148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. விராட் கோலி 34 பந்துகளில் 35 ரன்கள் ரவீந்திர ஜடேஜா 29 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடினர். திறமையாக விளையாடியதற்காக இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.