நவ.6.
t20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12சுற்றுக்கு வந்த 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் அரை இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளன. அரையிறுதி போட்டிகள் நவம்பர் 9 மற்றும் 10ஆம் தேதியில் கீழ்க்கண்ட விவரப்படி நடைபெற உள்ளது.
Semi-Finals Fixtures T20 World Cup 2022!
1st Semi-Final
🇳🇿NEW ZEALAND vs PAKISTAN🇵🇰
09th Nov 1.30 pm at Sydney
2nd Semi-Final
🇮🇳INDIA vs ENGLAND🏴
10th Nov 1.30 pm at Adelaide
டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு புதிய விதியை ஐசிசி அறிவித்துள்ளது. பொதுவாக மழை குறுக்கிட்டால் ஆட்டம் முடிவு பெற இரண்டு இன்னிங்சிலும் குறைந்தபட்சம் 5 ஓவர்கள் வீசப்படும். ஆனால் புதிய ஐசிசி விதிகளின்படி டி20 உலக கோப்பையில் அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டத்தில் ஒரு போட்டிக்கு இரண்டு இன்னிங்ஸ்களிலும் குறைந்தபட்சம் 10 ஓவர் வீசப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்து ஓவர்களுக்கும் குறைவாக எதிர்கொள்ளும் முன்னர் போட்டி கைவிடப்பட்டால் ஒதுக்கப்பட்ட நாளில் அதே கட்டத்தில் போட்டி மீண்டும் நடைபெறும். அந்நாளிலும் அணிகள் ஒவ்வொரு இன்னிங்சிலும் 10 ஓவர்களை முடிக்க இயலவில்லை என்றால் புள்ளிகள் பட்டியலில் அதிக இடத்தை பிடித்த அணி டி20 உலக கோப்பை போட்டியின் இறுதி போட்டிக்கு தகுதி பெறும். இறுதிப் போட்டிக்கான ரிசர்வ் நாளிலும் ஒவ்வொரு இன்னிங்சிசிலும் 10 ஓவர்களை முடிக்க இயலவில்லை என்றால் டி20 உலக கோப்பை இறுதிபோட்டியில் மோதும் இரு அணிகளும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.