ஜூலை.20.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்தில் அமைந்துள்ள அமராவதி அணையின் நீர் மட்டம் 84.20 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் உயரம் 90 அடி. மேலும் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைக்கு விநாடிக்கு 6344 கனஅடி நீர்வரத்து வந்துகொண்டிருக்கிறது. அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், அமராவதி ஆற்றில் உபரி நீர் முழுமையாக திறந்துவிட வாய்ப்புள்ளது. மேலும் இது தொடர்பாக தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், அமராவதி வடிநில உட்கோட்டம் உதவி செயற்பொறியாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகளில் சிறுவர்கள் இளைஞர்கள். பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட எவரும் நீரில் இறங்கி குளிப்பாதையோ. மீன் பிடிப்பதையோ, கால்நடைகளை குளிப்பாட்டுவதையோ, புகைபடங்கள் எடுப்பதையோ, முற்றிலும் தவிர்க்குமாறு கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.