ஜன.25.
ரயில் நிலையங்களில் உணவுப் பொருட்களின் விலை உயர்த்தப்பட இருக்கிறது . சமையல் எரிவாயு விலை உயர்வு, விலைவாசி உயர்வு காரணமாக ரயில்வே கேண்டீன் உணவு பொருட்களின் விலையும் உயர்த்தப்பட இருக்கிறது.
இரண்டு இட்லி சாம்பார் சட்னிஉடன் ரூ. 13 லிருந்துரூ. 20 , மசால் தோசைரூ.16ல் இருந்து ரூ. 25. மெதுவடை , மசால் வடை, ரவா உப்புமா , ஆனியன் தோசை, ஊத்தப்பம் வெங்காய பக்கோடா ஆகியவை ரூ. 17 இல் இருந்து ரூ. 30 ஆக உயர்கிறது.
வெஜிடபிள் சாண்ட்விச் 19 இல் இருந்து 30, தக்காளி சாதம் 14 லிருந்து 20, பொங்கல் 16லிருந்து 25 , புளிசாதம் 21 லிருந்து 35, தயிர் சாதம் 18 லிருந்து 30 ,எலுமிச்சை சாதம் 19ல் இருந்து 30 ,தேங்காய் சாதம் 19ல் இருந்து 25, சாம்பார் சாதம் 20ல்இருந்து 30, சைவ குருமாவுடன் இரண்டு பரோட்டா அல்லது நான்கு சப்பாத்திகள் ரூ.29 இல் இருந்துரூ. 45 ஆகவும் விலை உயர்த்தபட உள்ளது. ஒருசில ரயில்வே நிலைய கேட்டரிங் ஸ்டால்களில் உணவுகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. எனினும் ரயில்வே நிர்வாகத்தில் இருந்து விலை பட்டியல் வந்ததும் பட்டியல் வைக்கப்படும் விலை உயர்வு அமல்படுத்தப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.