ஜன.10.
. கரூர் அபயப்பிரதான ரெங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடந்த டிசம்பர் 31ம்தேதி தேதி தொடங்கியது. பகல் பத்து வழிபாடு நடைபெற்று வந்தது. இன்று காலை 4.30 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நிகழ்வு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பரமபத வாசல் திறக்கப்பட்டிருக்கும் என்பதால் தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று முதல் இராப்பத்து வைபவம் தொடர்ந்து நடைபெறுகிறது. காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.