பிப்.24.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக பல்வேறு திட்ட பணிகளை இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் பேரூராட்சி, புகழூர் நகராட்சி ஆகிய பகுதிகளில் புதிய வார சந்தை வணிக வளாகத்தை குத்துவிளக்கு ஏற்றி மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ ஆகியோர் பார்வையிட்டனர்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் பேரூராட்சிகள் துறை சார்பில் உப்பிடமங்கலம் பேரூராட்சியில் டாக்டர் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.575 லட்சம் மதிப்பீட்டில் உப்பிடமங்கலம் பேரூராட்சியில் புதிய வார சந்தை, கால்நடை கூடம் மற்றும் வணிக வளாக கட்டப்பட்ட கட்டிடங்கள்,
மேலும், புகழூர் நகராட்சி டாக்டர் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.94 லட்சம் மதிப்பீட்டில் புகழூர் நகராட்சி வார சந்தை புதிய வணிக வளாக கட்டிடங்களையும் மற்றும் ரூ.114 லட்சம் மதிப்பீட்டில் புகழூர் நகராட்சி புதிய அலுவலக கூடுதல் கட்டடங்களையும் திறந்து வைக்கப்பட்டு உள்ளது.
உப்பிடமங்கலம் பேரூராட்சி தலைவர் திவ்யா, பேரூராட்சி துணைத் தலைவர் பாக்கியலட்சுமி. செயல் அலுவலர் பானு ஜெயராணி, கலந்து கொண்டனர்.
