மார்ச்.4.
கரூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு உறுப்பினர் தேர்தல் நடைபெற்றது. பெண் மேயர் தேர்வு மற்றும் துணை மேயர் தேர்வு நேற்று கரூர் மாநகராட்சி புதிய கட்டடத்தில் நடைபெற்றது .முதல் பெண் மேயராக கவிதாகணேசன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பிற்பகலில் துணைமேயர் பொறுப்புக்கு தாரணி சரவணன் தேர்வு செய்யப்பட்டார் . இருவருக்கும் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். மேயர் கவிதா கணேசனுக்கு மேயருக்கான அங்கி வழங்கப்பட்டு செங்கோல் வழங்கப்பட்டது.
மேயராக பொறுப்பேற்ற கொண்ட பின்னர் கவிதா கணேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக முதல்வர் தளபதி மின்சாரத்துறை அமைச்சர் ஆகியோரது வழிகாட்டுதலின்படி மக்கள் பணிகளை ஆற்றுவேன். கரூர் மாவட்டத்திற்கு 10 ஆண்டுகளில் செய்யாததை எட்டு மாதத்தில் மின்சாரத்துறை அமைச்சர் திட்டங்களை கொண்டு வந்துள்ளார் . நீண்டகால பிரச்சினையான புதிய பேருந்து நிலையம் அமைச்சர் முயற்சியின் பேரில் அமைக்கப்பட இருக்கிறது. புதிய வேளாண் கல்லூரி கொண்டு வந்துள்ளார். கரூர் நகராட்சி சாலைகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அமைச்சர் வழிகாட்டலின் பேரில் மக்கள் பணிகளை மேற்கொள்வேன். இனாம் கரூர் நகராட்சியாக இருந்தபோது கலைஞர் ஆட்சியில் நான் நகர்மன்றத் தலைவராக பணியாற்றி உள்ளேன் . அப்போது குடிநீர் பிரச்சனை தீர்க்கப்பட்டது. கூட்டு குடிநீர் திட்டம் புதிதாகக் கொண்டுவரப்பட்டது. பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டது. குகை வழி பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனது கணவர் கணேசன் தமிழ்நாடு முழுவதும் கட்சிக்காக பேச்சாளராக இருந்து பணியாற்றியுள்ளார் . அவரது உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக நான் கருதுகிறேன் என்றார்.