நவ.14.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.2.09 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட கரூர் தாந்தோன்றிமலை அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோவில் முடி காணிக்கை மண்டபத்தை காணொலிக் காட்சி வாயிலாக திறந்துவைத்தார். முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.2.09 கோடி மதிப்பில் கரூர் தாந்தோன்றிமலை அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோவில் முடி காணிக்கை மண்டபத்தை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றிவைத்தார். இந்நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் முன்னிலை வகித்தார். துணை மேயர் .ப.சரவணன், மண்டலக்குழு தலைவர்கள் எஸ்.பி.கனகராஜ், கோல்ட் ஸ்பாட் ராஜா, உதவி காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ், அறநிலையத்துறை உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் இளையராஜா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.