ஜூலை.29.
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் (ஆவின்) சார்பில் 10 கோடியே 61 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 50,000 லிட்டர் பால் உற்பத்தித் திறன் கொண்ட 2 பால் பண்ணைகள், 5,000 லிட்டர் திறன் கொண்ட தயிர் மற்றும் மோர் தயாரிக்கும் ஆலை மற்றும் ஆய்வகக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்து, கடலூர் மாவட்டம். ம. பொடையூரில் 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கால்நடை தீவன தொழிற்சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
பால் நுகர்வோர்களுக்கு தரமான பால் தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை ஏற்படுத்தும் விதமாக கரூர் மாவட்டம், தோரணக்கல் பட்டியில் 2 கோடியே 30 இலட்சம் ரூபாய் செலவில் நாளொன்றுக்கு 50,000 லிட்டர் பால் பதப்படுத்தும் உற்பத்தித் திறன் கொண்ட நவீன பால் பண்ணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். உற்பத்தி அதிகரிப்பதுடன் பால் உற்பத்தியாளர்களின் வருவாயும் உயரும்.
கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர். காந்தி, மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமைச்செயலாளர் சிவ் தாஸ் மீனா. கால்நடை பராமரிப்பு, பால் வளம்.மீன்வளம் கூடுதல் தலைமைச் செயலாளர்டாக்டர் கே. கோபால். பால்பண்ணை மேம்பாட்டு துறை இயக்குநர்மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் மேலாண்மை இயக்குநர் மருத்துவர் க. வினித் கலந்து கொண்டனர். இதனை அடுத்து கரூர் தோரணகல்பட்டி புதிய பால் பண்ணையை கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல், எம்எல்ஏக்கள் இளங்கோ, சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், ஆவின் பொது மேலாளர் சுஜாதா, உதவி பொது மேலாளர் துரையரசன் பார்வையிட்டனர்.