ஜன.19.
பழனி முருகன் கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்தக்கோரி
கரூர் வழக்கறிஞர் தமிழ் இராஜேந்திரன் தாக்கல் செய்த ரிட் மனு எண் 970/2023 தொடர்பாக இன்று 19/01/2023 மதுரை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் கிருஷ்ணகுமார் & விஜயகுமார் முன்பு விசாரணை நடைபெற்றது.
பழனி முருகன் கோயில் குடமுழுக்கின்போது தமிழ் மொழியை சிறப்பாக பயன்படுத்தப் போவதாக உறுதி அளித்து, குடமுழுக்கு அழைப்பிதழை இந்து சமய அறநிலையத்துறையினர் சமர்ப்பித்தனர்.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நாராயணன் இது நம்பத்தக்கது அல்ல என ஆட்சேபித்தார்.
இறுதியில்
பழனி தண்டாயுதபாணி கோயில் குடமுழுக்கில் நீதிமன்றத்தில் உறுதி கூறியபடி தமிழ் எந்த அளவு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்த நிலை அறிக்கையை கோயில் நிர்வாகத்தினர் தாக்கல் செய்ய உத்திரவிட்டு 30/01/2023 அன்று வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.