ஜன.17.
கரூர் மாவட்டம் குளித்தலை தொகுதி தோகமலை ஆர்.டி. மலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிராம பொதுமக்கள் சார்பாக 61 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு விழா இன்று தொடங்கியது.
போட்டிக்காக வெளி மாவட்டங்களில் இருந்து வேன்களில் கொண்டுவரப்பட்ட காளைகள் களம் இறக்கப்பட்டன. கரூர் மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் தலைமையில் 2 ஏடிஎஸ்பி, 6. டி எஸ்பிக்கள், 15 இன்ஸ்பெக்டர்கள் 320 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 15 படுக்கை வசதியுடன் 16 மருத்துவ அலுவலர்கள், 8 செவிலியர்கள் 12 கிராம செவிலியர்கள் என 120 சுகாதார பணியாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
குளித்தலை எம்.எல.ஏ. மாணிக்கம், ஆர்.டி.மலையில் ஜல்லிக்கட்டு விழாவை துவக்கி வைத்து, பார்வையிட்டார். தோகைமலை ஒன்றிய செயலாளர்கள் இராமர் ( முன்னாள் எம்எல்ஏ), புழுதேரி அண்ணாதுரை, தொழில் அதிபர் காந்திராஜன், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேன்மொழி தியாகராஜன்,
தோகைமலை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்
ஆர்.டி.மலை சின்னையன், ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் தியாகராஜன்,
மாணிக்கம், ஆர்.டி.மலை சந்திரன், பெரியசாமி, . செந்தில்குமார் .தமிழரசன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.