மே.2.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் மற்றும் இயக்கங்கள் சார்பில் இன்று கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது அதில்,
கடவூரில் இயற்கை ஆர்வலர்களின் 10 ஆண்டு கோரிக்கையான அருகி வரும் உயிரினமான தேவாங்கு சரணாலயம் அமைத்தமைக்கு வாழ்த்துக்கள்!
4 ஆண்டுகாலமாக அனுமதியின்றி இயங்கி, சட்ட விரோத கனிம கடத்தலால் சுமார் 50 கோடி வரை அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி கனிமக் கொள்ளை நடத்தி, ஒருவர் உயிர் இழந்தும் -2 பேர் படுகாயமடைய செய்த கல்குவாரி உரிமையாளர்களையும், அவர்களுக்கு துணை நின்ற அனைத்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரூர் மாவட்டத்தில் உள்ள 350 கல் குவாரிகளில், 108 மட்டுமே அனுமதியோடு இயங்க, அனுமதி காலம் முடிந்து மூடப்பட்டதாக ஆவணங்களில் மட்டும் கூறிக் கொண்டு, சட்டப்படி அரசு விதிகளின்படி சுற்றுச்சூழல் விதிகளின்படி குவாரிகள் கம்பி வேலி அமைத்தும் பசுமை வளையங்கள் அமைத்து அனைத்தும் மூடப்படாமல், அதிகாரிகளின் துணையோடு சட்டவிரோதமாக இயங்கி வரும் அனைத்து Abonded குவாரிகளையும் மூடி, அரசு இழந்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை அபராதமாக வசூலித்து குற்ற வழக்கில் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் .
நெடுஞ்சாலை துறையில் 10ஆண்டு ஊழல்
மேலும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒருங்கிணைப்பாளர் முகிலன் கூறியது_-
நெடுஞ்சாலைத்துறையில் நடந்ந சிஸ்டமேட்டிக் ஊழல்கள் தற்போதுதான் அங்கேயும்- இங்கேயுமாக சில வெட்ட வெளிச்சமாகி வருகிறது.கடந்த 10 ஆண்டு காலமாக நெடுஞ்சாலைத் துறையை தனது பொறுப்பில் வைத்திருந்த, அமைச்சராகவும் முதலமைச்சராகவும் பதவி வகித்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் போது, நெடுஞ்சாலை துறையில் நடைபெற்ற மாபெரும் முறைகேடுகளை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர், இந்த சுண்ணாம்புக் கல்குவாரி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை ( EIA) மீதான
கருத்துக் கேட்புக் கூட்டத்தை முறையாக ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும், சட்டப்படி அனைத்து மக்களும் பங்கேற்கும் வகையில், அனைத்து வாய்ப்புகளையும் ஏற்படுத்தி ஜனநாயக பூர்வமாய் “மக்களுக்காக அரசு ” என்ற முறையில் நடத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்வதாக கூறினார். விஜயன் சண்முகம், வாசுதேவன், காளிமுத்து,, ரகுமான்,உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.