டிச.18
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்வீட் –
அன்னூர் பகுதியில் விவசாயிகளின் விருப்பமின்றி எந்த நிலமும் கையகப்படுத்தப்படாது என வெளிப்படையாக அறிவித்துள்ள விவசாய பாதுகாவர் தமிழக முதலமைச்சர் உத்தரவை விவசாயிகள் மனப்பூர்வமாக வரவேற்கின்றனர். நன்றி தெரிவிக்கின்றனர்.
நியாயமான கோரிக்கைளை முன்வைத்து போராடியதூத்துக்குடி ஏழை மக்கள் மீது துப்பாக்கியால் சுட்டு பிணங்களின் மீது ஆட்சி நடத்தியவர், அரசின் இந்த அறிவிப்புக்கும் நானே காரணம் என்று அறிக்கை விட்டு தனக்குத் தானே சொறிந்து கொள்வது அறியாமை; மக்களால் நிராகரிக்கப்பட்ட பூனைகள் கண்களை மூடினால் உண்மை இருண்டு விடுவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.