பிப்.17.
தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி வழியாக ஹூப்பள்ளி (கர்நாடகா) – ராமேஸ்வரம் இடையே ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ரயில் எண்.07355 ஹூப்பள்ளி- ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் சனிக்கிழமைகளில் காலை 06.50 மணிக்கு ஹூப்பள்ளியில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 06.15 மணிக்கு ராமேஸ்வரத்தை சென்றடையும். இந்த ரயில் வரை இயக்க அறிவிக்கப்பட்டுள்ளது
ரயில் எண்.07356 ராமேஸ்வரம் – ஹூப்பள்ளி வாராந்திர சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.00 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமைகளில் இரவு 7.40 மணிக்கு ஹூப்பள்ளியை சென்றடையும். இந்த ரயில் வரை இயக்க அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த சிறப்பு ரயில்களின் சில சேவைகள் செயல்பாட்டு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரயில் எண்.07355 ஹூப்பள்ளி – ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில், மார்ச் 22, 29 & ஏப்ரல் 05, 12, 19, 26, 2025 ஆகிய தேதிகளில் புறப்பட திட்டமிடப்பட்டிருந்த (6 சேவைகள்) ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் எண்.07356 ராமேஸ்வரம் – ஹூப்பள்ளி வாராந்திர சிறப்பு ரயில், மார்ச் 23, 30 & ஏப்ரல் 06, 13, 20, 27, 2025 ஆகிய தேதிகளில் புறப்பட திட்டமிடப்பட்டிருந்த (6 சேவைகள்) ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.