ஏப்.12.
கரூர் மாவட்டத்தில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. மாலை முதலே பரவலாக மழை பெய்ய துவங்கியது . அரவக்குறிச்சியில் அதிகபட்சமாக 93 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம்-(மி.மீ).
கரூர் 23.40, அரவக்குறிச்சி 93, அணைப்பாளையம் 29, க.பரமத்தி 11.60, குளித்தலை 8:20, கிருஷ்ணராயபுரம் 33.50, மாயனூர் 23, பஞ்சப்பட்டி 4.50, கடவூர் 3, மைலம்பட்டி 4, மொத்தம் 233.20, சராசரி 19.43. அமராவதி அணையின் நீர்மட்டம் 90. அடி . நீர் இருப்பு 48.69 அடியாக உள்ளது.