ஆக.17.
கரூர் மாவட்டத்தில் நேற்று இரவு கனமழை பெய்தது. கரூர் பகுதியில் இடி மின்னலுடன் மழை கொட்டியது. மழை அளவு(-மி.மீ.)-
கரூர் 62.80, அரவக்குறிச்சி 74, அணைப்பாளையம் 52, க.பரமத்தி 24.60, மாயனூர் 7.40, பஞ்சபட்டி 3.60, மயிலம்பட்டி 1.60,
மாயனூர் கதவணைக்கு 23707 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் 22087 கன அடி நீர் திறக்கப்படுகிறது. தென்கரை வாய்க்காலில் 800 கன அடி, கட்டளை மேட்டு வாய்க்கால் 400 கன அடி, புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் 400 கன அடி, கிருஷ்ணராயபுரம் வாய்க்கால் 20 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.