நவ.25.
வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர்
மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று தொடங்கி 5 நாட்களுக்கு
கனமழை நீடிக்கலாம். 9துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி, காரைக்கால், புதுச்சேரி ஆகிய 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. தமிழகத்தை நோக்கி காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நெருங்கி வரும் நிலையில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
: டெல்டா மாவட்டங்களுக்கு நாளை முதல் இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட். விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு நாளை(26.11.2024) ரெட் அலர்ட்.மயிலாடுதுறை, கடலூர், காரைக்கால் மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் (27.11.2024) ரெட் அலர்ட். விடுக்கப்பட்டுள்ளது.அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.