ஜூலை.16.
நடப்பு கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது அர்ஜென்டினா அணி. இறுதிப் போட்டியில் கொலம்பியாவை வீழ்த்தியது. இந்த தொடரை 16-வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது அர்ஜென்டினா.
முன்னதாக ரசிகர்கள் வருவதில் தாமதம் ஏற்பட்ட காரணத்தால் ஆட்டம் சுமார் 90 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது. ஆட்டத்தின் முழு நேரமான 90 நிமிடங்கள் மற்றும் ஸ்டாப்பேஜ் டைம் கடந்தும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. 30 நிமிடங்கள் எக்ஸ்ட்ரா டைம் வழங்கியும் 15 நிமிடங்களில் கோல் எதுவும் பதிவு செய்யவில்லை.
இரண்டாவது 15 நிமிடத்தில் முழு முயற்சியுடன் இரு அணிகளும் போராடின. அதற்கான பலனாக அர்ஜென்டினா அணியின் லாடாரோ மார்டினஸ் கோல் பதிவு செய்தார். இது இந்தத் தொடரில் அவர் பதிவு செய்த 5-வது கோலாக அமைந்தது. அதன் மூலம் தங்கக் காலணி (கோல்டன் பூட்) விருதை அவர் வென்றார்.
அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸிசிக்கு கணுக்காலில் மோசமான காயம் ஏற்பட்டது. அதற்கு முதல் உதவி செய்து கொண்டு விளையாடியும் கால் வீங்கியதால் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார் மெஸ்ஸி. அதனால் ரசிகர்கள் சோகமாகினர். நேரம் முடிந்தும் கோல் போடாததால் 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. 97வது நிமிடத்தில் மற்றொரு நட்சத்திர வீரரான மார்டினெஸ்-ஐ அர்ஜென்டினா உள்ளே அனுப்பியது. அவர் 112 வது நிமிடத்தில் கோல் அடித்து போட்டியில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தினார். இதை அடுத்து ஆட்ட நேர முடிவில் அர்ஜென்டினா 1 – 0 என்ற கோல் கணக்கில் கொலம்பியா அணியை வீழ்த்தியது.அர்ஜென்டினாவின் சூப்பர் ஸ்டார் ஆக மாறினார் மார்டினெஸ்.
இந்த தொடரில் மொத்தம் ஐந்து கோல் அடித்து கோல்டன் பூட் விருதையும் வென்றார். அர்ஜென்டினா அணி 16வது முறையாக கோபா அமெரிக்கா கோப்பையை வென்று வரலாற்று சாதனை செய்தது. மேலும் 2021 கோபா அமெரிக்கா கோப்பை, 2022 கால்பந்து உலகக் கோப்பை மற்றும் 2024 கோபா அமெரிக்கா கோப்பை என தொடர்ந்து மூன்று பெரிய தொடர்களில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றுள்ளது.