மே.24.
கரூர் மாவட்டம். புலியூர் செட்டிநாடு பொறியியல் கல்லூரியில் 2ஆம் கட்டமாக ‘கல்லூரி கனவு நிகழ்ச்சி கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.
கரூர் மாவட்டத்தில், நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக கல்லூரி கனவு 2025 பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி முதற் கட்டமாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காணியாளம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி என 36 அரசு பள்ளிகளை சேர்ந்த 1.129பேர் கலந்து கொண்டனர். கரூர் மாவட்டத்தில் “கல்லூரி கனவு” -2025 உயர் கல்வி வழிகாட்டுதல்கள் நிகழ்வானது வருவாய் கோட்ட அளவில் 2 வது கட்டமாக புலியூர் செட்டிநாடு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் பேசுகையில், 16 அரசு பள்ளிகளைச் சார்ந்த 480 மாணாக்கர்களும் மற்றும் காணியாளம்பட்டி பாலிடெக்னிக் கல்லூரியில் 6 அரசு பள்ளிகளைச் சார்ந்த 388 மாணாக்கர்கள் என மொத்தம் 868பேர் பயன்பெற்றனர். ‘கல்லூரிக் கனவு 2025 நிகழ்வின் மூலம் உயர்கல்வி சார்ந்த ஆலோசனைகளும், வழிகாட்டுதல் கையேடுகளும் வழங்கப்பட்டு, உயர்கல்வியில் பாடப்பிரிவுகள். உயர்கல்வி நிறுவனங்கள்.வேலை வாய்ப்புகள், கல்லி கடன் உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் அறிந்து உயர்கல்வியை நோக்கி அடியெடுத்து வைப்பதில் இக்கல்லூரி கனவு நிகழ்வானது முக்கிய பங்கு வகிக்கிறது.
சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகள் நலத்துறை பள்ளிகளின் குழந்தைகள், ஒற்றைப் பெற்றோர் உள்ள அல்லது பெற்றோரை இழந்த குழந்தைகள், அரையாண்டு தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், பள்ளிக்கு வருகை புரியாமல் இருந்து இடைநின்ற மாணவர்கள், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளடக்கிய அணுகுமுறையை கொண்டு உயர்கல்வி சார்ந்த வழிகாட்டுதல்களை வழங்கி சரியான பாதையை தேர்ந்தெடுக்க செய்கிறது.குறிப்பாக எதிர்காலத்தில் எந்தெந்த துறைகளில் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. முன்னேறிவரும் அறிவியல் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப திறன்களை எவ்வாறு மென்மேலும் வளர்த்துக்கொள்ளலாம் உள்ளிட்ட புல்வேறு பயனுள்ள நாவல்களை துறை வல்லுநர்கள் எடுத்துரைத்துள்ளனர். மேலும், மாணாக்கர்கள் அனைவரும் உயர்கல்வி பயின்று வாழ்க்கையின் அடுத்தகட்டத்திற்கு முன்னேற்றம் அடைய வேண்டும்.
உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பங்கேற்றோர் தங்கள் இல்லங்களின் அருகாமையில் உள்ளவர்களுக்கும் பகிர வேண்டும். ஆசிரியர்கள் தமது பள்ளியில் பயின்ற அனைத்து மாணவ மாணவியர்களும் உயர் கல்வியில் சேர்வதை உறுதி செய்திட வேண்டும். கரூர் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 2097 மாணாக்கர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதென என கலெக்டர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) செல்வமணி, ஆர்டிஓ.முகமது பைசல், கலால் உதவி ஆணையர் கருணாகரன் கலந்து கொண்டனர்.