மார்ச்.1.
கரூர் மாவட்ட அளவிலான தேசிய பசுமை படை பள்ளி மாணவர்களின் கண்காட்சி
தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை வழிகாட்டுதலின்படிகரூர் மாவட்ட தேசிய பசுமை படை வாயிலாக கரூர் மாவட்ட தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் டைமன்ட் கலைச்செல்வி அவர்கள் ஒருங்கிணைப்பு செய்து நீடித்த நிலையான ஆரோக்கியமானவாழ்க்கை முறைக்கான சுற்றுச்சூழலை பாதுகாப்பதின் அவசியத்தை எடுத்துக்கூறும் வகையில் 48 பள்ளிகளில் இருந்து இரண்டு மாணவர்கள் மூன்று மாணவர்கள் நான்கு மாணவர்களால் என்று தனித்தனி குழுக்களாக ஆர்வமுடன் கலந்து கொண்டனர் இதில் குப்பையில் இருந்து மின்சாரம் எடுத்தல் கழிவு நீரை சுத்தப்படுத்துதல் வீட்டு தோட்டம் மாடி தோட்டம் ஆரோக்கியமான உடம்புக்கு சிறுதானிய உணவு வகைகள் அடுப்பில்லா சமையல் வகையில்மற்றும் பழ வகைகள் காய்கறிகள்- பயன்படுத்தக்கூடாத பிளாஸ்டிக் பதிலாக மாற்றுப் பொருள்கள் உபயோகித்தல்- சோலார் டார்ச் தயாரித்தல்- பயோ முறையில் பிளாஸ்டிக் தயாரித்தல் கழிவுகளில் இருந்து உபயோகமான பொருட்கள் தயாரித்தல்- நியூஸ் பேப்பரில் இருந்து பைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் செய்தல் போன்ற கண்காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டன.
அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர் இந்த கண்காட்சியை15 பள்ளிகளில் இருந்து சுமார் 450 மாணவர்கள் பார்வையிட்டனர். சிறந்த படைப்புகளுக்கு 35000 பண பரிசும் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் ஊக்கப்படுத்துவதற்கு பண பரிசும் வழங்கப்பட்டது . இதில் ஏ.இ. ஆதவன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கோபால், முதலமைச்சரின் பசுமைத் தோழர் ஆகியோர் நடுவர்களாக இருந்து சிறந்த படைப்புகளை தேர்ந்தெடுத்தனர்.ராஜமாணிக்கம் தாளாளர் சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பரிமளா எப்சிபா தலைமையாசிரியை, சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலைப்பள்ளி சுமதி, ஏஞ்சல் ஆசிரியை மற்றும் பள்ளி ஆசிரியைகள் கலந்துகொண்டு இந்நிகழ்வு ஏற்பாடுகளை கவனித்தனர்.