மார்ச்.7.
கரூர் மாவட்டநிர்வாகம். மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன் பெறும் வகையில் 15.03.2025 அன்று தாந்தோன்றிமலை அரசுகலைக் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், நடைபெறவுள்ளது.
இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில், உற்பத்திதுறை. ஜவுளித்துறை, இன்ஜினியரிங் கட்டுமானம், ஐடி ஆட்டோமொபைல்ஸ், விற்பனை, மருத்துவம் சார்ந்த துறைகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்காக 10000-க்கும் மேற்பட்ட பணிக் காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.முகாமில் எட்டாம் வகுப்பு. பத்தாம்வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு தொழிற்கல்வி பயின்றவர்கள். செவிலியர்கள், பொறியியல் மாணவர்கள் என அனைத்து பிரிவினரும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு இல்லை.
இம்முகாமிற்கு வருகை புரியும் அனைத்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் தங்களது சுயவிவரம் (Bio-data) மற்றும் கல்விச் சான்றுகளின் நகல்களுடன் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இம்முகாமில் தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு பணி நியமன ஆணை உடனுக்குடன் வழங்கப்படும். பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. மேலும், இம்முகாமில் கலந்து கொள்ள வேலை நாடுநர்களும், வேலையளிப்போரும் எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. அனுமதி முற்றிலும் இலவசம் வேலைநாடும் மனுதாரர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் candidate login – லவ் விவரங்களை பதிவு செய்தல் வேண்டும். மேலும் விவரங்களுக்கு மனுதாரர்கள் 9345261136 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.
இம் முகாமில் கலந்துகொள்ள விரும்பும் தனியார்துறை நிறுவனங்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து அவ்விணைய தளத்தின் வாயிலாக இவ்வேலைவாய்ப்பு முகாமிற்கு விண்ணப்பித்தல் வேண்டும். மேலும் விபரங்களுக்கு வேலையளிப்போர் (Employer) 9360557145 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும். இம்மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் வேலை தேடும் இளைஞர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.