செப்.13.
கரூர் மாவட்டம். குளித்தலை வட்டம். அய்யர்மலை டாக்டர் கலைஞர் அரசு கலை கல்லூரியில் குளித்தலை கோட்டத்திற்குட்பட்ட மாவர்களுக்கான “உயர்வுக்கு படி” நிகழ்ச்சி கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்திகழ்ச்சியில் கலெக்டர் பேசுகையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள் படிப்பில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும் வெற்றியாளர் ஆக்கும் வகையில் திறன் மேம்பாடு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய நான் முதல்வன் என்கிற புதுமைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக உயர்வுக்குபடி என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2022-2023 மற்றும் 2023- 2024-ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு பயின்று உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்காக உயர்வுக்கு படி” எனும் நிகழ்ச்சி வருவாய் கோட்டம் வாரியாக 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக. கரூர் வருவாய் கோட்டத்திற்குட்டப்பட்ட அரசு. அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் மாணாக்கர்களுக்கான உயர்வுக்கு படி” நிகழ்ச்சி கடந்த 09.11.2024 அன்று நடத்தப்பட்டது.
பெற்றோரின் பொருளாதார சூழ்நிலை. கல்வி செல்ல விருப்பமின்மை மற்றும் கலந்தாய்வு போன்ற பல்வேறு காரணங்களால் உயர்கல்வியில் இணைந்து படிக்க இயலாத மாணவர்களின் விவரங்களை தலைமையாசிரியர்கள் மூலம் தொடர்பு கொண்டு, அவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல்கள் மற்றும் கல்விக் கடன் தேவைப்படும் மாணவ, மாணவிகளுக்கு உதவிடும் வகையில் வங்கிகள் மூலம் தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது
எனவே மாணவ, மாணவியர்கள் உடனடியாக தங்களது விருப்பபடி பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து உடனடியாக உயர்கல்வியில் சேர வேண்டும்.உயர்கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பல்வேறு சிறந்த வேலை வாய்ப்புகள் காத்து கிடக்கின்றன. அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்கள் உயர் கல்வியில் சேரும் பொழுது தமிழ்நாடு அரசால் மாதாந்திரம் ரூ.1000/- வழங்கும் புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும். எந்தெந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகளவில் தேவையாக உள்ளது என்பது குறித்தும். அரசு நடத்தும் போட்டித் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் வழங்கப்படுவது, குடும்பச் சூழ்நிலையால் மேற்படிப்பை தொடர் இயலாதவர்களுக்கு ஆலோசணைகளும் தொடர்புடைய துறை அலுவலர்கள் மூலம் இந்நிகழ்ச்சியின் வாயிலாக வழங்கப்படுகிறது. இதுதவிர மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் துறை வல்லுநர்களைக் கொண்டு இன்று காலை முதல் மாலை வரை இந்த முகாம் மூலம் மாணவர்கள் மேற்படிப்பினைத் தொடர பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்வி ஒன்றே உயர்விற்கு உறுதுணையாக இருக்கும் என்பதையும். தொடர்ந்து முயற்சித்தால் இங்கு வருகை புரிந்துள்ள ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் சாதிக்க முடியும், அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் உயர் கல்வி பயில தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும் என்றார்.
நிகழ்ச்சியில் கல்லூரி கல்வி இயக்ககம் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு உயர்கல்வியில் உள்ள பிரிவுகள் வேலைவாய்ப்புகள்0அதன் முக்கியத்துவங்கள் குறித்தும். விளக்கப்பட்டது. மாணவர்களுக்கு தேவைப்படும் சான்றிதழ்கள் வழங்குவதற்காக வருவாய்த்துறை சார்பில் 15- சேவை அரங்குகள். அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சமூக நலத்துறை, உள்ளிட்ட துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு உயர்கல்வி ஆலோசனைகள் வழக்கப்பட்டன.
டி ஆர்ஓ.கண்ணன், ஆர்டி ஓ. கருணாகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இளங்கோ, மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் சண்முக வடிவேல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகம்மாள், உதவி இயக்குநர் (பயிற்சி) செல்வன் விஜய், தமிழ்துறை தலைவர் மற்றும் இணை பேராசிரியர் ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் ன.